தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University -TNJFU) தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் 2012ஆம் ஆண்டில், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகச் சட்டம், 2012இன் படி நிறுவப்பட்டது.[1].இப்பல்கலைக்கழகம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர். ஜெ. ஜெயலலிதா அவர்களின் பெயரில் அழைக்கப்படுகிறது.

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்
முந்தைய பெயர்s
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைகற்றல், கண்டுபிடித்தல், மேம்படுத்தல்
வகைதமிழ்நாடு அரசு வேளாண்மை பல்கலைக்கழகம்
உருவாக்கம்2012
நிறுவுனர்ஜெ. ஜெயலலிதா
வேந்தர்தமிழக ஆளுநர்
துணை வேந்தர்டாக்டர். எஸ். பெலிக்ஸ், பிஎச்டி
அமைவிடம்நாகப்பட்டினம்,, தமிழ்நாடு, இந்தியா
சுருக்கப் பெயர்த.நா.ஜெ.மீ.ப
இணையத்தளம்tnjfu.ac.in
பேராசிரியர் பெலிக்ஸ், தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்

படிப்புகள்

இப்பல்கலைக்கழகத்தில், மீன் வளர்ப்பு, மீன்வள உயிரியல், மீன் பிடித்தல், மீன் உயிர்தொழில்நுட்பம், மீன்வள பொருளாதாரம், மீன்கள் வாழும் சூழ்நிலையியல், மீன்வள விரிவாக்கம், மீன்வள தொழில்நுட்பம், மீன்வள பொறியியல் மற்றும் மீன்கள் பதப்படுத்தல் குறித்தான படிப்புகள் உள்ளது. மாணவர்கள் இப்பல்கலைகழகத்தில் பொது நுழைவுத்தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறுகிறது.

  1. நான்காண்டு இளநிலை மீன்வள அறிவியல் பட்டம் (பி. எப். எஸ்சி - B.F.Sc) .
  2. எட்டு படிப்புகளில் இரண்டாண்டு முதுநிலை மீன்வள அறிவியல் பட்டம் (எம். எப். எஸ்சி - M.F.Sc)
  3. நான்கு படிப்புகளில், மூன்றாண்டு முனைவர் பட்டப்படிப்பு[2]

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள், பயிற்சி மற்றும் ஆய்வு மையங்கள்

எண்.கல்லூரியின் பெயர்இடம்மாவட்டம்இணைப்புநிறுவிய ஆண்டுஇணையதளம்
1மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு மையம்தூத்துக்குடிதூத்துக்குடி மாவட்டம்தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்1977[3]
2மீன்வள தொழில்நுட்ப கழகம்பொன்னேரிதிருவள்ளூர் மாவட்டம்தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்2012[4]
3மீன்வள பொறியியல் கல்லூரிநாகப்பட்டினம்நாகப்பட்டினம் மாவட்டம்தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்2012[5]
4மீன்வள் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம்மாதவரம்சென்னைதமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்[6]
5மீன்வள பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்தஞ்சாவூர்தஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்[7]
6மீன்வள பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்பரக்கைகன்னியாகுமரி மாவட்டம்தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்[8]

பிற மையங்கள்

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பிற இரண்டு மையங்கள் சென்னையில் அமைந்துள்ளது.

  1. பணியாளர் பயிற்சி நிறுவனம், சென்னை
  2. மீன்வள தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி நிறுவனம், (FITT) சென்னை http://www.tnfu.org.in/university/wp/?page_id=3683

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.