தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு அரசால் 2005 ஆண்டு உடல்கல்வியியல் மற்றும் விளையாட்டுக்கள் துறைகளுக்கென சென்னையில் அமைக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம். இந்தியாவிலேயே இதுவே விளையாட்டுக் கல்விக்காக அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் ஆகும்.

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைஉடற்கல்வியியல் மற்றும் விளையாட்டில் செம்மை
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Excellence in Physical Education And Sports
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்15 செப்டம்பர் 2005
வேந்தர்பன்வாரிலால் புரோகித்[1]
துணை வேந்தர்ஏ. எம். மூர்த்தி
மாணவர்கள்7500
அமைவிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்நகர்ப்புறம்
இணையத்தளம்www.tnpesu.org

வழங்கும் படிப்புகள்

இப்பல்கலைக்கழகம் கீழ்காணும் நான்கு பிரிவுகளின் கீழான இளம்நிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் ஆய்வியல் நிறைஞர், முனைவர், மதிப்புறு முனைவர் போன்ற ஆய்வியல் பட்டப்படிப்புகளையும் வழங்குகிறது.

  1. ஆசிரியர் கல்வி
  2. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்
  3. உடல்நலம் மற்றும் உடல்நல அறிவியல்
  4. மேலாண்மை

வெளி இணைப்புகள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.