பெரியார் பல்கலைக்கழகம்

பெரியார் பல்கலைக்கழகம், சேலத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1997 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது. பல்கலைக்கழகத்திற்கு சமூக சீர்திருத்தவாதி பெரியார் பெயரிடப்பட்டது. பல்கலைக்கழக தேசிய தர நிர்ணய ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது.

பெரியார் பல்கலைக்கழகம்
பெரியார் பல்கலைக்கழகம்
பெரியார் பல்கலைக்கழகத்தின் விண் காட்சி

குறிக்கோள்:அறிவால் விளையும் உலகு
குறிக்கோள் ஆங்கிலத்தில்:Wisdom Maketh the World
நிறுவல்:1997
வேந்தர்:பன்வாரிலால் புரோகித்[1]
துணைவேந்தர்:முனைவர் பொ. குழந்தைவேலு
முதல்வர்:கு. தங்கவேல் (பதிவாளர் (பொ))
அமைவிடம்:சேலம், தமிழ்நாடு, இந்தியா
(11°43′6″N 78°4′41″E)
வளாகம்:நகர்ப்புறம்
விளையாட்டில்
சுருக்கப் பெயர்:
PU
சார்பு:பல்கலைக்கழக மானியக் குழு (UGC)
இணையத்தளம்:http://www.periyaruniversity.ac.in

வரலாறு

பெரியார் பல்கலைகழகம் தமிழக அரசால் 1997 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்பொழுது வணிகவியல், புவி அமைப்பியல், கணிதம் ஆகிய மூன்று துறைகள் தொடங்கப்பட்டன. முதல் துணை வேந்தராக திரு. டி ஜெயக்குமார், முதல் பதிவாளராக திரு.வேலுசாமி நல்லியன் ஆகியோர் பங்காற்றியுள்ளனர்.

நிர்வாகம்

சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இதன்கீழ் இயங்குகின்றன. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய தர மதிபீட்டுக் குழு ஆய்வின் அடிப்படையில் தற்பொழுது A அங்கிகாரம் பெற்றுள்ளது

பல்கலைக்கழக துறைகள்

பெரியார் பல்கலைக்கழகத்தின் உட்புறச் சாலைகள்
 
 
  • எம்.ஏ. பொருளியல்
  • எம்.ஏ. ஆங்கிலம்
  • எம்.ஏ. இதழியல் மற்றும் மக்கள் தொடர்பாடல்
  • எம்.ஏ. தமிழ்
  • எம்.ஏ. சமுகவியல்
  • எம்.பி.ஏ மேலாண்மையியல்
  • எம்.சி .ஏ
  • எம்.காம். வணிகவியல்
  • எம்.எட். கல்வியியல்
  • எம்.எஸ்.சி உயிரி வேதியியல்
  • எம்.எஸ்.சி உயிரி தொழினுட்பம்
  • எம்.எஸ்.சி வேதியியல்
  • எம்.எஸ்.சி கணினியியல்
  • எம்.எஸ்.சி உணவு அறிவியல்
  • எம்.எஸ்.சி சுற்றுச்சூழல் அறிவியல்
  • எம்.எஸ்.சி பயன்பாட்டு புவி அமைப்பியல்
  • எம்.எஸ்.சி கணிதம்
  • எம்.எஸ்.சி நுண்ணுயிரியில்
  • எம்.எஸ்.சி இயற்பியல்
  • எம்.எஸ்.சி உளத்தியல்
  • எம்.எல்.ஐ.எஸ் நூலக, தகவல் தொழிற்னுட்ப அறிவியல்
  • எம் எஸ்சி . விலங்கியல்

தொடர்புக்கு.

மக்கள் தொடர்பு அலுவலகம்,

பெரியார் பல்கலைக்கழகம்,

பெரியார் பல்கலை நகர்,

சேலம் - 636 011, தமிழ்நாடு, இந்தியா.

மின்னஞ்சல் proofficepu@gmail.com, தொலைபேசி: 0427-2345766, 2345520

இணைவுக் கல்லூரிகள்

பெரியார் பல்கலைக்கழகத்தில்106 கல்லூரிகள் இணைவுப்பெற்றுள்ளன[2]; ஒரு முதுகலை விரிவாக்க நடுவம் அரசு கலைக்கல்லூரி தருமபுரியில் செயல்படுகின்றது.[3]

பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்

இப்பல்கலைக்கழகம் பின்வரும் உறுப்புக்கல்லூரிகளை[4] நிருவகித்து வருகின்றது.

  1. பெரியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேட்டூர் அணை, சேலம் மாவட்டம் - 636401
  2. பெரியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பென்னாகரம் தர்மபுரி மாவட்டம் - 636806
  3. பெரியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரூர், தர்மபுரி மாவட்டம்.
  4. பெரியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எடப்பாடி, சேலம் மாவட்டம்-637102
  5. பெரியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டம்- 637409
  6. பெரியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி,பாப்பிரெட்டிப்பட்டி , தர்மபுரி மாவட்டம்-636905

சான்றுகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.