கலசலிங்கம் பல்கலைக்கழகம்

கலசலிங்கம் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் என்கிற ஊரில் அமைந்துள்ள ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகும். அருள்மிகு கலசலிங்கம் பொறியியல் கல்லூரி என்ற பெயரில் 1984 இல் தொடங்கப்பட்டது. பின்னர் பலகலைக்கழக அங்கீகாரம் பெற்றது. கலசலிங்கம் மற்றும் அனந்தம் அம்மாள் அறக்கட்டளையால் நிருவகிக்கப்படுகிறது.

கலசலிங்கம் பல்கலைக்கழகம், திருவில்லிபுத்தூர்
துணை வேந்தர்டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன்
அமைவிடம், தமிழ்நாடு, இந்தியா
இணையத்தளம்www.kalasalingam.ac.in

வளாகம்

கலசலிங்கம் பல்கலைக்கழகம் கிருஷ்ணன்கோவில் சிற்றூரில் மலைகள் சூழ்ந்த அழகும் அமைதியும் நிறைந்த சுற்றுப்புறத்தில் அமைந்துள்ளது.மதுரையிலிருந்து 60 கிமீ தொலைவிலும் திருவில்லிப்புத்தூரிலிருந்து 10 கிமீ தொலைவிலும் மதுரை - செங்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஓர் முதன்மையான கல்வி நிறுவனமாக விளங்குகிறது.

பல்கலைக்கழகச் சிறப்புகள்

  • பொறியியலில் 11 பட்டப்படிப்பு மற்றும் 17 பட்டமேற்படிப்பு திட்டங்களையும் வணிக மேலாண்மை. கணினி செயற்பாடுகள், அறிவியல் ஆகியவற்றில் முதுநிலை பட்டத்திட்டங்களையும் வழங்கி வருகிறது.
  • விருப்பத் தேர்வு அடிப்படையிலான நெகிழ்வான கல்வித் திட்டம்
  • ஆய்வுச்சாலை வசதிகள்
  • பேச்சு,கேட்பு மாற்றுத்திறனாளர்களுக்கான தொழில்நுட்ப பட்டப்படிப்புகள்
  • வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இரட்டை பட்டப்படிப்புகள்
  • தொழிலக செயல்முறைகளைக் குறித்த விழிப்புணர்வை கூட்டும் வகையில் பயிற்சிப் பள்ளிகள்
  • பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு கல்வித்திட்டங்களில் பணிபுரிவோரும் பயன்பெறுமாறு பகுதிநேர வகுப்புகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.