தமிழ் இணையக் கல்விக்கழகம்

தமிழ் இணையக் கல்விக்கழகம் (முந்தைய பெயர் :தமிழ் இணையப் பல்கலைக்கழகம்) உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களின் மரபுகளையும் பண்பாட்டையும் காக்கவும் அவர்களது இலக்கியத் தொடர்பினை நீட்டிக்கவும் 17 பெப்ரவரி 2001ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியாவில் இணையவழியே கல்வி வளங்களையும் வாய்ப்புகளையும் உலகளாவிய கல்விக்காக நிறுவப்பட்ட முதல் மற்றும் இணையில்லா அமைப்பாக இது விளங்குகிறது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழாவில் இதற்கான அறிவிப்பினை தமிழக முதல்வர் அறிவித்தார். தமிழ் இணையப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு,ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது.

தமிழ் இணையக் கல்விக்கழகம்

நிறுவல்:2001
வகை:தமிழ் இணைய வழி
வேந்தர்:சந்திர மோகன் இ.ஆ.ப.
தலைவர்
துணைவேந்தர்:சந்திர மோகன் இ.ஆ.ப.
இயக்குனர்:சந்தோஷ் பாபு இ.ஆ.ப.
இயக்குநர்
அமைவிடம்:சென்னை, தமிழ்நாடு,, இந்தியா
இணையத்தளம்:http://www.tamilvu.org
தமிழ் இணையக்கல்விக்கழகப் பெயர்ப்பலகை

இதன் தற்போதைய தலைவராக தா.கி. ராமச்சந்திரன் இ.ஆ.ப உள்ளார். இயக்குனராக சந்தோஷ் பாபு இ.ஆ.ப உள்ளார்.

கல்வித்திட்டம்

இக்கழகத்தின் பணித்திட்டம் இணையவழிக் கல்வித்திட்டங்கள், மின் நூலகம், கணித்தமிழ் வளர்ச்சி என பலவற்றைக் கொண்டுள்ளது. கல்வித்திட்டத்தின் கீழ் சான்றிதழ்க் கல்வி மூன்று நிலைகளில் (அடிப்படை, இடைநிலை மற்றும் உயர்நிலை) வழங்கப்படுகிறது. தவிர, தமிழ் மொழி இளங்கலைப் பட்டப்படிப்பும் அளிக்கப்படுகிறது. தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வழியே தமிழ் முதுகலைப் பட்டமும் வழங்கப்படுகிறது.

மின் நூலகம்

தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் மின் நூலகம், தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்ந்து, பயில்வோர் மற்றும் உலகு தழுவி வாழும் தமிழர்கள் அனைவரது பயன்பாட்டிற்காகவும் உருவமைக்கப்பட்டுள்ளது. இம்மின் நூலகத்தில் நூல்கள், அகராதிகள், பிற பார்வைக் கூறுகள் என்னும் 3 பிரிவுகள் உள்ளன. தமிழ்ச் சங்கம், சங்க கால நூல்களிலிருந்து சமகால இலக்கியம் வரை பல இலக்கிய படைப்புகளின் மின்னூல்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. வகைப் பிரித்தல், விளக்கவுரைகளுடன் கூடிய தொன்மை இலக்கியங்கள் மற்றும் உரோமன் எழுத்துருவில் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்பன இந்நூலகத்தின் சிறப்புகளாக விளங்குகிறது. விரிவான பொருள்சார் சுட்டிகளாக்குதல் (subject-indexing) மற்றும் தேடல் வசதிகளும் பெரும் வசதியாக உள்ளது.

கணித்தமிழ் வளர்ச்சி

கணித்தமிழின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கானப் பணிகளையும் இப்பல்கலைக்கழகம் கீழ்கண்ட அமைப்புகளைக் கொண்டு மேற்பார்வையிட்டு வருகிறது.

பல்கலைக்கழகமாக தகுதிஉயர்வு

தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ் மொழியில் இலக்கண இலக்கியங்களையும், தமிழ் மொழி வரலாறு, தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றைப் பயில விரும்புவோரின் தேவைகளை நிறைவு செய்வதற்கு உதவும் வகையில் இந்நிறுவனம் பிற பல்கலைக்கழகங்களுக்கு நிகராக முழுமையான பல்கலைக்கழகமாக நிலை உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் மு. கருணாநிதி அறிவித்தார். அதற்கான சட்டம் இயற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.