ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்
இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் (Rajiv Gandhi National Institute of Youth Development, RGNIYD), திருப்பெரும்புதூர், தமிழ்நாடு நாடாளுமன்ற சட்டம் எண்.35/2012இன்படி 1993இல் நிறுவப்பட்ட பொதுத்துறை கல்வி நிறுவனமாகும். இது இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரவையின் கீழ் இது செயல்படுகின்றது.
இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் | |
---|---|
राजीव गांधी राष्ट्रीय युवा विकास संस्थान | |
![]() | |
நிறுவல்: | 1993 |
வகை: | பொது |
இயக்குனர்: | முனைவர். இலதா பிள்ளை |
அமைவிடம்: | திருப்பெரும்புதூர், தமிழ்நாடு, இந்தியா |
வளாகம்: | 42 ஏக்கர்கள் |
இணையத்தளம்: | rgniyd.gov.in |
இந்த நிறுவனத்தில் இளைஞர் மேம்பாட்டிற்கான பட்ட மேற்படிப்பு திட்டங்களையும் ஆய்வுத் திட்டங்களையும் நல்குகின்றது. மாநில முகமைகளுக்கும் இளைஞர் அமைப்புகளுக்கும் பயிற்சி திட்டங்களையும் ஒருங்கிணைக்கின்றது. நாடு முழுவதும் விரிவாக்கப் பணிகளிலும் பரப்புரை முயற்சிகளிலும் பங்கேற்கின்றது.
நாட்டின் இளைஞர் தொடர்பான நடவடிக்கைகளுக்கான முதன்மை நிறுவனமாக விளங்குகின்றது. நாட்டு நலப்பணித் திட்டம், நேரு யுவ கேந்திர சங்காதன் மற்றும் பிற இளைஞர் அமைப்புகளுடன் பயிற்சி திட்டங்களை வகுப்பதில் பங்கேற்கின்றது. ஊரக, நகரிய மற்றும் பழங்குடி பகுதிகளில் இளைஞர் மேம்பாட்டிற்கான ஒருங்கிணைப்பாளராகவும் பயிற்சிகளுக்கு மைய முகமையாகவும் உள்ளது.