சிறீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகம்

சிறீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக்கழகம் (SRMC & RI), தற்போது சிறீ இராமச்சந்திரா பல்கலைக்கழகம் (SRU),சென்னையின் போரூரில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரியாகும். இந்த நிறுவனம் செப்டம்பர் 11, 1985இல் இராமசாமி உடையாரின் சிறீ இராமச்சந்திரா கல்வி & உடல்நல அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. செப்டம்பர் 1994இல் பல்கலைக்கழக மானியக் குழு 1956 சட்டத்தின் பிரிவு மூன்றின்படி நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது. இதில் எட்டு கல்லூரிகளும் 45 மருத்துவத் துறைகளும் உள்ளன. 3500 மாணவர்களுக்கு 92 பாடத்திட்டங்களில் மருத்துவக் கல்வி வழங்குகின்றது.

சிறீ இராமச்சந்திரா பல்கலைக்கழகம்

குறிக்கோள்:உயர் கல்வியில் உயர் தகைமைகள்
Higher Values in Higher Education
நிறுவல்:1985
வகை:தனியார்
நிதி உதவி:$24,717,000
ஆசிரியர்கள்:1020
இளநிலை மாணவர்:2500
முதுநிலை மாணவர்:500
அமைவிடம்:போரூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்:போரூர், சிறீ இராமச்சந்திரா நகர் வளாகத்தில் 175 ஏக்கர்கள் (0.71 km2) பரப்பில் 123 கட்டிடங்கள்
இணையத்தளம்:www.srmc.edu
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.