அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் (Mother Teresa Women's University) தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது கல்வி வழி பெண்களை முன்னேற்றுவதை தம் இலக்காகக் கொண்டு செயல்படும் கல்வி நிறுவனம் ஆகும். 1984 ஏப்ரலில் சரி நிகர் சமானம் என்ற பாரதியின் மொழியை இலக்காகக் கொண்டு அவரது நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்டது. அத்தருணத்தில் தனது மகத்தான சேவைக்காக நோபல் விருதைப் பெற்ற அன்னை தெரசாவை அங்கீகரிக்கும் வகையில் அவரது பெயரைப் பல்கலைக்கழகத்துக்குச் சூட்டியதுடன், அவரது கரங்களால் கொடைக்கானலில் அடிக்கல் நாட்டச் செய்துத் துவக்கப்பட்டது. தொடக்கத்தில் கொடைக்கானலில் உருவாக்கப்பட்டுப் பின்னர் 1990 இல் சென்னைக்கு மாற்றப்பட்டு மீண்டும் கொடைக்கானலுக்கு 1994 இல் மாற்றப்பட்டது. இதன் மையங்கள் கொடைக்கானல், மதுரை மற்றும் சென்னையில் உள்ளன. இங்கு பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, இளநிலை ஆய்வுப்படிப்பு, முனைவர் பட்ட ஆய்வு, ஆசிரியர் பயிற்சிப்பட்ட வகுப்பு, சான்றிதழ் வகுப்புகள், சுய தொழில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

குறிக்கோள்:"சரி நிகர் சமானம்"
நிறுவல்:1984
வகை:பொதுத்துறை பல்கலைக்கழகம்
வேந்தர்:வித்தியாசாகர் ராவ்
துணைவேந்தர்:முனைவர் ஜி. வள்ளி
அமைவிடம்:கொடைக்கானல், தமிழ்நாடு, இந்தியா
வளாகம்:ஊரகம்
சார்பு:பல்கலைக்கழக மானியக் குழு
இணையத்தளம்:www.motherteresawomenuniv.ac.in

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.