சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ்

சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ், (சி. என். ஆர். ராவ்) (பிறப்பு 30 ஜூன் 1934), ஒரு இந்திய வேதியியலாளர் ஆவார். இவர் தற்போது இந்திய பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவராக பணியாற்றுகின்றார். 16 நவம்பர், 2013 அன்று இந்திய அரசு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான பாரத ரத்னாவை இவருக்கு அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.[1][2][3][4] செவ்வாய் சுற்றுகலன் திட்டம் மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய்க் கிரகத்துக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவிய திட்டத்திற்கு இவர் துணையாக இருந்தார்.[5]. சீன அறிவியல் கழகம், இவரை கவுரவ வெளிநாட்டு உறுப்பினராக தேர்வு செய்தது.[6]

சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ் (கன்னடம்:ಚಿಂತಾಮಣಿ ನಾಗೇಶ ರಾಮಚಂದ್ರ ರಾವ್ )
பிறப்பு30 சூன் 1934 (1934-06-30)
பெங்களூரு, மைசூர் அரசு (தற்போதய கருநாடகம், இந்தியா)
வாழிடம்இந்தியா
தேசியம்இந்தியர்
துறைவேதியியல்
பணியிடங்கள்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர்
இந்திய அறிவியல் கழகம்
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
University of California, Santa Barbara
Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research
கல்வி கற்ற இடங்கள்பனாரசு இந்து பல்கலைக்கழகம்
Purdue University
அறியப்படுவதுSolid-state chemistry
பொருளறிவியல்
விருதுகள்Hughes Medal (2000)
India Science Award (2004)
(FRS)(1984)
Abdus Salam Medal (2008)
Dan David Prize (2005)
Legion of Honor (2005)
பத்மசிறீ
பத்ம விபூசண்
(2013)
பாரத ரத்னா

தொழில் வாழ்க்கை

1984 முதல் பாரதப் பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவராக பணியாற்றி வரும் சி.என்.ஆர். ராவின் ஆரம்பகால வாழ்க்கை, பெங்களூர் இந்திய அறிவியல் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகத் தொடங்கியது. கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் வேதியியல் துறைத் தலைவர், இந்திய அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர், ஜவாஹர்லால் நேரு உயர் அறிவியல் ஆய்வு மையத்தின் தலைவர் போன்ற பல முக்கியமான பொறுப்புகளை வகித்த பேராசிரியர் சி.என்.ஆர். ராவின் அதிகபட்ச பங்களிப்பு வேதியியலில் நிறமாலை மற்றும் மூலக்கூறுகளில் இருந்தது.[7]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.