இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர்

இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் (இ.தொ.க. கான்பூர், Indian Institute of Technology, Kanpur, IITK) இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தின் தொழில் நகரமான கான்பூர் நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியாகும். இந்திய நாடாளுமன்ற சட்டத்தின் வாயிலாக 1959ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கழகம் இந்திய அரசினால் தேசிய இன்றியமையா கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.திசம்பர் 1959இல் கான்பூரில் ஃகார்ட்கோர்ட் பட்லர் டெக்னாலஜிகல் இன்ஸ்ட்டிடியூட்டின் உணவக கட்டிடத்தில் துவங்கியது.1963ஆம் ஆண்டில் தற்போதைய முதன்மை இணைப்புச் சாலையில் உள்ள இருப்பிடத்திற்கு இடம் பெயர்ந்தது. தனது முதல் பத்து ஆண்டுகளுக்கு கான்பூர் இந்திய-அமெரிக்க திட்டத்தின் கீழ் ஒன்பது அமெரிக்கப் பலகலைக்கழகங்களின் குழுமம் - எம்.ஐ.டி, கலிஃபோர்னியா பல்கலைக்கழகம்,பெர்க்லே,கலிஃபோர்னியா தொழில்நுட்பக் கழகம், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், கார்னெஜி தொழில்நுட்பக் கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம், ஓஃகியோ பல்கலைக்கழகம், கேஸ் வெஸ்டர்ன் தொழில்நுட்பக் கழகம் மற்றும் பர்டியூ பல்கலைக்கழகம், ஆய்வுக்கூடங்களை அமைக்கவும் பாடதிட்டங்களை வகுக்கவும் துணை நின்றன. [1] பொருளாதார அறிஞர் ஜான் கென்னத் கால்பிரைத்தின் வழிகாட்டலில் கணினி அறிவியலில் கல்வித்திட்டம் கொணர்ந்த முதல் இந்திய பல்கலைக்கழகம் கான்பூர் இ.தொ.கவாகும்.அமெரிக்க பல்கலைக்கழகங்களிலிலேயே புதுமையாக இருந்த ஐபிஎம் 1620 கணிப்பொறி இங்கு 1963 ஆகஸ்ட்டில் நிறுவப்பட்டு 1971 ஆண்டிலிருந்து கணினி பொறியியல் கல்வியில் தனியான முதுகலை மற்றும் முனைவர் பாடதிட்டங்கள் அளிக்கப்படுகிறது.

இந்திய தொழில்நுட்பக் கழகம்
(கான்பூர்)
இ.தொக கான்பூர் சின்னம்

குறிக்கோளுரை தமசோ மா ஜ்யோதிர்கமய (இருளிலிருந்து ஒளிக்கு வழிகாட்டு)
நிறுவியது 1959
வகை கல்வி மற்றும் ஆய்வு கழகம்
இயக்குனர் சஞ்சய் கோவிந்த் தாண்டே
ஆசிரியர்கள் 450
பட்டப்படிப்பு 2,000
பட்டமேற்படிப்பு 2,000
அமைவிடம் கான்பூர், உத்திரப்பிரதேசம் இந்தியா
வளாகம் ஊரகம், 4.27 கிமீ² (1055 ஏக்கர்)வனப்பகுதி
இணையதளம் http://www.iitk.ac.in

படித்த முன்னோர்

மேற்கோள்கள்

  1. கேல்கர், P.K. (2006-03-17). "இ.தொ.க கான்பூர் வரலாறு". இ.தொ.க கான்பூர். பார்த்த நாள் 2006-05-27.

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.