ஆய்வு

ஆய்வு (ஒலிப்பு ) (Research) என்பது ஒரு அறிவுத்தேடல்/அறிவியல் தேடல் எனலாம். மதியால் செயலாக்கப்படும் ஆய்வுகள் புதிய அறிதல்களையும் புரிதல்களையும் உள்ளடக்கும். இவை பெரும்பாலும் அறிவியல் முறைசார்ந்து இயங்குகின்றன.

ஆய்வுகளின் அடிப்படைத் தேவை பயனுள்ள ஆராய்ச்சி, அதில் கண்டுபிடிப்புகள், விளக்கங்கள், புதிய முறைகளை கையாளுதல் மற்றும் கண்டறிதல் ஆகியன. குறிப்பாக அறிவியல் படைப்புகள் மற்றும் வளர்ச்சி சார்ந்தே இவ்வாய்வுகள் இயங்குகின்றன.

ஆராய்ச்சிகளின் வகைகள்

ஆராய்ச்சிகள் பெரும்பாலும் அறிவியல் மற்றும் மதிநுட்பத்தை சார்ந்தே இருக்கும். இதன் மைய நோக்கம் மதி வளர்ச்சியே ஆகும். இவைகளைக்கொண்டு பல துறைகளைக் கருதி மூன்றாகப் பிறிக்கின்றனர்.

  • அறிவியல் ஆய்வு - சிக்கல்களுக்கான தீர்வை நோக்கி
  • கலை ஆய்வு - கலை மற்றும் பண்புகளை நோக்கி
  • வரலாற்று ஆய்வு - வரலாறு மற்றும் சான்றுகளை நோக்கி

அறிவியல் ஆய்வு

அறிவியல் வளர்ச்சியை மையப்படுத்தியும், சிக்கல்களுக்கு தீர்வு காணுவதை கொண்டும் அறிவியல் உக்தியை பயன்படுத்தி ஆராய்ச்சி மேற்கொண்டு பல முடிவுகளை காணுதல். இவைகளில் அறிவியல் துறைகள், சமுக சார்ந்த சீர்திருத்தங்களைக் காண, இவைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. இவைகளில்

  1. கண்காணித்தல்,
  2. கண்காணித்ததை தொகுத்து தலைப்பை கண்டறிதல்
  3. கொள்கைகளை வகுத்தல்
  4. கொள்கை வரையறைகளைக் கொடுத்தல்
  5. செயலாக்க வரையறைகளைக் கொடுத்தல்
  6. ஆவணங்களைச் சேகரித்தல்
  7. ஆவணங்களைச் சரிபார்த்தல்
  8. கொள்கைகளைத் தீர அலசுதல்
  9. தீர்வைக்கண்டறிந்து வெளிப்படுத்தல்.

இவையே அறிவியல் ஆராய்ச்சியின் வழிமுறைகள். இவைகளின் முடிவாக ஒரு தீர்வு காணப்பட்டதை பரிசோதனை செய்து சான்றுபகர்தல்.

கலை ஆய்வு

கலைகளையும் பண்புகளையும் கொண்டு ஆராயும் பகுதியாகும். இது அறிவியல் வழிமுறைகளைப் பயன்படுத்தி ஆராய்தல் என்பதில் சற்று மாறுபட்டு இவை சில பண்புகளைக்கொண்ட அளவீடூகளைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளலில் அடங்கும்.

வரலாற்று ஆய்வு

இதில் வரலாற்றாசிரியர்கள் அளித்த ஆதாரங்களைக் கொண்டு , அறிவியல் வழிமுறைகளை பின்பற்றி வரலாற்று சிக்கல்களுக்கு கிடைக்கும் ஆதாரங்களை ஒப்பிட்டு தீர்வு காணும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதை மேற்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றனர்.

  1. ஆவணங்களின் பிறப்பையறிதல்
  2. சிக்கலுக்கான கிடைக்கப்பெறும் சான்றுகள்
  3. வரலாற்றாசிரியரின் உண்மை மற்றும் முக்கியத்துவம்
  4. ஆவணங்களை தீர அலசுதல்
  5. ஒற்றுமையை கண்டறிதல்
  6. நம்பத்தக்கவைகளை சுட்டல்/சுட்டிக்காண்பித்தல் ஆகியன.

இவைகளால் நமக்கு வரலாற்று உண்மைகள் அறியக் கிடைக்கின்றன.

ஆய்வு முறைகள்

ஆராய்ச்சியின் இலக்கு அறிவுத்தேடலை நிறைவு செய்தலேயாகும். அதைக்கொண்டு இதை மூன்றாகப் பகுக்கின்றனர்.

  • சிக்கல்களின் பண்பை அறிந்து தீரநோக்கல்
  • தீர்வுகளுக்கான வழிகளைக் கண்டறிதல்
  • கண்டறியப்பட்ட தீர்வுகளை சான்று பகர சாத்தியக்கூறுகளை பார்த்தல் ஆகியன.

இதுவே படிநிலைகளிலும் வகைப்படுத்துகின்றனர்

  • முதற்படி - ஆவணங்களை சேகரித்தல்
  • இரண்டாம்படி - சுருக்கம், ஒப்பிட்டு தீர்வு காணல் ஆகியன.

கலை ஆய்வைக்கொண்டு, பண்புசார் ஆய்வு எனவும் அளவுசார் ஆய்வும் என்வும் விவரிக்கின்றனர்.

அச்சு வெளியீடுகள்

கண்டறிந்தவைகளை சிறந்த இதழ்களில் வெளியிடுவதன் மூலம் அது பரவி அனைவருக்கும் பயனளிக்கும்.

ஆய்வு நிதியுதவி

நிதியுதவி அளிக்க சில அரச நிறுவணங்களும் சில தனியார் நிறுவனங்களும் இயங்கிவருகின்றன. ஆனால், சிக்கல்களின் முக்கியத்துவம் அதனால் பெறப்படும் தீர்வைக்கண்டே உதவி கிடைக்கின்றன.

மேற்கோள்கள்

  • Trochim, W.M.K, (2006). Research Methods Knowledge Base.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.