இளையான்குடி ராஜேந்திர சோழீசுவரர் கோயில்

இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில் சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடியில் அமைந்துள்ள சிவபெருமான் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [1]

இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):இந்திர அவதாரநல்லூர்
பெயர்:இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில்
அமைவிடம்
ஊர்:இளையான்குடி
மாவட்டம்:சிவகங்கை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:இராசேந்திர சோழீஸ்வரர்
உற்சவர்:சோமாஸ்கந்தர்
தாயார்:ஞானாம்பிகை
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:தெய்வபுஷ்கரணி
வரலாறு
தொன்மை:புராதனக்கோயில்

அமைவிடம்

மதுரை-இராமநாதபுரம் சாலையில், பரமக்குடியை அடுத்து காரைக்குடி சாலையில், எமனேஸ்வரம், குமாரக்குறிச்சி, திருவுடையார்புரம் ஆகிய ஊர்களை அடுத்து இளையான்குடி அமைந்துள்ளது. அப்பகுதியில் இக்கோயில் உள்ளது. [1]

சிறப்பு

இத்தலம் இளையான்குடி மாறநாயனார் அவதரித்து முக்தி பெற்ற தலமாகும்.[2][3] இத்தலத்தில் மாறநாயனாருக்குச் சன்னதி உள்ளது. இக்கோயிலில் அவர் ’பசிப்பிணி மருத்துவர்’ என்று வழங்கப்படுகிறார். கோயிலுக்குச் சற்று தூரத்தில் இவர் வாழ்ந்த வீடும் பயிர் செய்த நிலமும் அமைந்துள்ளன. இவர் பயிர் செய்த நிலத்தை "முளைவாரி அமுதளித்த நாற்றாங்கால்" என்றழைக்கப்படுகின்றனர். இவரது குருபூஜை நாளன்று இத்தலத்து இறைவனாருக்கு தண்டுக்கீரை படைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. http://www.vakeesarperavai.com/nayanmar/Ilayangudimarar%2004.html
  3. http://temple.dinamalar.com/New.php?id=413
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.