பாளையங்கோட்டை திரிபுராந்தகர் கோயில்
பாளையங்கோட்டை திரிபுராந்தகர் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
பாளையங்கோட்டையில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயில் உள்ள இடத்தை திரிபுராந்தகம் என்றும் அழைக்கின்றனர். [1]
இறைவன், இறைவி
இக்கோயிலில் உள்ள இறைவன் திரிபுராந்தகர் ஆவார். இறைவி விசாலாட்சி ஆவார். [1]
பிற சன்னதிகள்
திருச்சுற்றில் ஜ்வரஹரேசுவரர், சப்தமாதர்கள், அறுபத்துமூவர், மகா கணபதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், கஜலட்சுமி சரஸ்வதி, சனீஸ்வரர், நடராச சபை, நவக்கிரகங்கள், கால பைரவர், சந்திரன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஜலதுர்க்கை ஆகியோர் உள்ளனர். [1]
மேற்கோள்கள்
- பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.