அவல் பூந்துறை புஷ்பவனேசுவரர் கோயில்
அவல் பூந்துறை புஷ்பவனேசுவரர் கோயில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
ஈரோட்டிலிருந்து அறச்சலூர் வழியாகச் செல்கின்ற தாராபுரம் சாலையில் பூந்துறை என்னுமிடத்தில் உள்ளது. அவல் பூந்துறை, பூந்துறை எனப்படுகின்ற இரு பெயர்களும் ஒன்றேயாகும்.
இறைவன்,இறைவி
கருவறையில் உள்ள மூலவர் புஷ்பவனேசுவரர் ஆவார். இறைவி பாகம் பிரியாள் ஆவார்.இறைவி சன்னதி முன் மண்டபத்துடன் தனிக் கோயிலாக அமைந்துள்ளது. [1]
திருச்சுற்று
திருச்சுற்றில் நவக்கிரகங்கள், சனி, பைரவர், தான்தோன்றீஸ்வர லிங்கத்திருமேனி, தர்மசம்வர்த்தனி, சூரியன் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. வன்னி மரத்தடியில் விநாயகர் உள்ளார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா உள்ளனர். [1]
மேற்கோள்கள்
- பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.