ராதிகா சரத்குமார்

இராதிகா, (பிறப்பு: ஆகத்து 21, 1963)[1] தென்னிந்திய திரைப்பட நடிகை , தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் ஆவார். ராடன் மீடியா (Radaan Media Works (I) Limited) என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்,[2] இதன் மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கிறார்.

இராதிகா

பிறப்பு ஆகத்து 21, 1963 (1963-08-21)
கொழும்பு, இலங்கை
துணைவர் சரத்குமார்
பிள்ளைகள் இராகுல் சரத்குமார்
ரய்னே ஹார்டி
பெற்றோர் எம். ஆர். இராதா
கீதா இராதா

வாழ்க்கைச் சுருக்கம்

இலங்கையில் கொழும்பு நகரில் 1963 ஆகத்து 21 இல் நடிகர் எம். ஆர். ராதாவுக்கும், அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் ராதிகா. நடிகை நிரோஷா, திரைப்படத் தயாரிப்பாளர் ராதா மோகன் ஆகியோர் இவருடன் உடன்பிறந்தவர்கள் ஆவர். நடிகரும் அரசியல்வாதியுமான ராதாரவி இவருடைய உடன்பிறவா சகோதரர் ஆவார்.

ராதிகா நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரை 2001 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இராகுல் என்ற மகன் 2004 ஆம் ஆண்டில் பிறந்தார். சரத்குமாரை திருமணம் புரிய முன்னர் ராதிகா இரு முறைகள் திருமணம் புரிந்து விவாகரத்துப் பெற்றவர். முதல் முறை மலையாள நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தனையும், பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரையும் திருமணம் புரிந்தார். ஹார்டியுடன் இவருக்கு ரயான் ஹார்டி என்ற பெண் குழந்தை உண்டு.

இராதிகா நடித்துள்ள சில திரைப்படங்கள்

இராதிகா நடித்துள்ள சில தொலைக்காட்சி தொடர்கள்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. https://tamil.filmibeat.com/celebs/radhika-sarathkumar/biography.html
  2. https://www.maalaimalar.com/News/TopNews/2017/04/11145215/1079364/Income-Tax-raid-Radaan-Media-office.vpf
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.