சிப்பிக்குள் முத்து

சிப்பிக்குள் முத்து, கே. விஸ்வநாத் இயக்கி 1986-ஆம் ஆண்டில் வெளியான இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், இராதிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தெலுக்கில் சுவாதிமுத்யம் (Swati Mutyam) என்ற பெயரில் முதலில் எடுக்கப்பட்டு பின்னர் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தின் இசை அமைப்பாளர் இளையராஜா ஆவர்.[1] இத்திரைப்படத்தின் பாடல்களைப் பாடியவர்கள் எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா, எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. சைலஜா ஆவர்.

சிப்பிக்குள் முத்து
திரைப்பட விளம்பர சுவரொட்டி
இயக்கம்கே. விஸ்வநாத்
தயாரிப்புஏடித. நாகேஸ்வர ராவ்
கதைகே. விஸ்வநாத்
திரைக்கதைகே. விஸ்வநாத்
வசனம்தேவ நாராயணன்
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
ராதிகா
ஒளிப்பதிவுஎம். வி. ரகு
படத்தொகுப்புஜி. ஜி. கிருஷ்ணா ராவ்
நடனம்சேஷு
கலையகம்பூர்ணோதயா மூவி கிரியேஷன்ஸ்
வெளியீடுஅக்டோபர் 2, 1986 (தமிழ்)
மார்ச் 13, 1986 (தெலுங்கு)
ஓட்டம்160 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தெலுங்கு

இத்திரைப்படமானது பெங்களூர் பல்லவி திரையரங்கில் தெலுங்கு மொழியில் அதிகபட்சமாக 450 நாட்கள் வரை ஓடியது. இத்திரைப்படம் 1989 ஆம் ஆண்டு இந்தி மொழியில் அனில் கபூர் நடிப்பில் ஈஸ்வர் எனும் பெயரில் இயக்குநர் கே. விஸ்வநாத் மீண்டும் படமாக்கினார். 2003 ஆம் ஆண்டு கன்னட மொழியில் இக்கதை சுவாதி முத்து எனும் பெயரில் படமாக்கப்பட்டது. கன்னட மொழியில் ராஜேந்திர பாபு இயக்கத்தில் நடிகர் சுதீப் மற்றும் மீனா நடித்திருந்தனர்.

நடிப்பு

பாடல்கள்

இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். தமிழ் பாடல் வரிகள் அனைத்தும் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். [2]

எண்பாடல்பாடகர்கள்பாடலாசிரியர்நீளம் (நி:வி)
1துள்ளி துள்ளிஎஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகிவைரமுத்து5:38
2வரம் தந்தபி. சுசீலாவைரமுத்து4:38
3ராமன் கதைஎஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜாவைரமுத்து6:22
4மனசு மயங்கும்எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகிவைரமுத்து5:23
5கண்ணோடு கண்ணானஎஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகிவைரமுத்து4:49
6தர்மம்எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜாவைரமுத்து2:52
7பட்டுச் சேலஎஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜாவைரமுத்து1:22
8வரம் தந்த (சோகம்)எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜாவைரமுத்து3:02

விருதுகள்

தேசிய திரைப்பட விருது

  1. சிறந்த தெலுங்கு திரைப்படம்

நந்தி விருது

  1. சிறந்த நடிகர் - கமல்ஹாசன்
  2. சிறந்த திரைப்படம்

தென்னிந்திய பிலிம்பேர் விருது

  1. சிறந்த இயக்குநர் - கே. விஸ்வநாத்

மேற்கோள்கள்

வெளியிணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.