போக்கிரி ராஜா
போக்கிரி ராஜா (ஆங்கிலம்:'Pokkiri Raja') 1982ஆவது ஆண்டில் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, ராதிகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இது சுத்தலுன்னாரு ஜாக்ரதா என்னும் தெலுங்குத் திரைப்படத்தின் மீளுருவாக்கமாகும்.
போக்கிரி ராஜா | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | எம். குமரன் எம். சரவணன் எம். பாலசுப்பிரமணியம் |
கதை | பஞ்சு அருணாசலம் |
இசை | எம். எஸ். விசுவநாதன் |
நடிப்பு | ரசினிகாந்த் ஸ்ரீதேவி ராதிகா |
ஒளிப்பதிவு | பாபு |
படத்தொகுப்பு | ஆர். விட்டல் |
கலையகம் | ஏவிஎம் படத்தயாரிப்பு நிறுவனம் |
விநியோகம் | ஏவிஎம் படத்தயாரிப்பு நிறுவனம் |
வெளியீடு | சனவரி 14, 1982 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- ரசினிகாந்த் - ரமேஷ் மற்றும் ராஜா (இரட்டை வேடம்)
- ஸ்ரீதேவி - ரமேஷின் மனைவி
- ராதிகா - ராஜாவின் காதலி
- மனோரமா
- முத்துராமன் - இறுதியாக நடித்த திரைப்படம்
- ஒய். ஜி. மகேந்திரன்
- ஐ.எஸ்.ஆர்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன் ஆவார்.[1] இப்படத்தில் இடம்பெற்ற 4 பாடல்களையும், கண்ணதாசன் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் எழுதியிருந்தனர்.
எண் | பாடல் | பாடியவர்(கள்) |
---|---|---|
1 | "கடவுள் படைச்சான்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
2 | "போக்கிரிக்கி போக்கிரி ராஜா" | மலேசியா வாசுதேவன் |
3 | "வாடா என் மச்சிகளா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி |
4 | "விடிய விடிய சொல்லி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா |
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.