சகலகலா வல்லவன்
சகலகலா வல்லவன் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அம்பிகா, வி. கே. ராமசாமி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் 1979-ல் வெளியான திரிசூலம் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
சகலகலா வல்லவன் | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | எம். குமரன், எம். சரவணன், எம். பாலசுப்ரமணியன் |
கதை | பஞ்சு அருணாசலம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பாபு |
படத்தொகுப்பு | ஆர். விட்டல் |
கலையகம் | ஏவிஎம் புரொடக்ஷன் |
விநியோகம் | ஏவிஎம் புரொடக்ஷன் |
வெளியீடு | ஆகத்து 14, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹8.5 கோடி |
இளையராஜாவின் இசையமைப்பில் உருவான பாடல்களை கவிஞர் வாலி இயற்றியிருந்தார்.
நடிகர்கள்
- கமல்ஹாசன் - வேலு
- அம்பிகா - கீதா
- ரவீந்திரன் - பழனி
- துளசி - வள்ளி, வேலுவின் தங்கை.
- வி. கே. ராமசாமி - ராமையா பிள்ளை
- ஒய். ஜி. மகேந்திரன் - பூனை
- தேங்காய் சீனிவாசன் - சுந்தரம்
- சில்க் ஸ்மிதா - லலிதா
- டி. எம். சாமிகண்ணு - சின்னையா பிள்ளை, வேலுவின் தந்தை.
- எஸ். என். பார்வதி - வேலுவின் தாயார்.
- ஓமக்குச்சி நரசிம்மன் - வேலையாள்
பாடல்கள்
சகலகலா வல்லவன் | |
---|---|
திரைப்படம் by | |
வெளியீடு | 1982 |
ஒலிப்பதிவு | 1982 |
இசைப் பாணி | திரைப்படத்தின் ஒலிப்பதிவு |
நீளம் | 28:35 |
இசைத்தட்டு நிறுவனம் | ஏவிஎம் |
இசைத் தயாரிப்பாளர் | எம். குமரன் எம். சரவணன் எம். பாலசுப்பிரமணியம் |
இளையராஜா அவர்கள் இப்படத்திற்கு பாடல் இசை அமைத்துள்ளார், வாலி அவர்கள் பாடல் வரிகள் எழுதியுள்ளார். "நிலா காயுது" எனும் பாடல் மத்தியமாவதி ராகம் அடிப்படையாக கொண்டது. "இளமை இதோ இதோ" பாடலானது புதுவருட கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் பிரபலமான பாடலாகும்.
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | இளமை இதோ இதோ ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வாலி | |
2 | நிலா காயுது ... | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | வாலி | |
3 | அம்மன் கோயில் ... | இளையராஜா | வாலி | |
4 | நேத்து ராத்திரி ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | வாலி | |
5 | கட்டவண்டி கட்டவண்டி (ஆண்)... | மலேசியா வாசுதேவன் | வாலி | |
6 | கட்டவண்டி கட்டவண்டி (பெண்) ... | எஸ். பி. சைலஜா | வாலி |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.