இந்தியப் பொதுத் தேர்தல், 2014

இந்தியப் பொதுத் தேர்தல் 2014 (Indian general election of 2014) இந்தியாவின் 16வது மக்களவையைக்கான 543 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2014 ஏப்ரல் 7 முதல் மே 12 வரை ஒன்பது கட்டங்களில் நடைபெற்றது. இந்திய வரலாற்றில் 1951க்கு பிறகு, அதிக நாட்கள், பல்வேறு கட்டங்களாக, வாக்குப்பதிவு நடைபெற்ற தேர்தல், இது ஆகும். இதற்கு முன் அதிக நாட்கள் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தல் 1951 முதல் 1952 வரை 5 மாதங்களுக்கு நடந்தது[3]. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தகவல்களின் படி, இத்தேர்தலில் 814.5 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றதால் இது உலகின் மிகப் பெரிய தேர்தல் ஆகவும் கணிக்கப்படுகிறது.[4] 2009 தேர்தலுக்குப் பின்னர் 100 மில்லியன் வாக்காளர்கள் புதிதாக வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.[5] 543 தொகுதிகளுக்கு மொத்தமாக 8,251 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.[6]

இந்தியப் பொதுத் தேர்தல், 2014

7 ஏப்ரல் – 12 மே 2014

மக்களவையின் 543 இடங்களுக்கு

272 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது
வாக்களித்தோர்66.38%
  First party Second party Third party
 
தலைவர் நரேந்திர மோதி ராகுல் காந்தி ஜெயலலிதா
கட்சி பா.ஜ.க காங்கிரசு அஇஅதிமுக
கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
தலைவராக 10 சூன் 2013 19 சனவரி 2013 1989
தலைவரின் தொகுதி வடோதரா, வாரணாசி அமேதி போட்டியிடவில்லை
முந்தைய தேர்தல் 159 தொகுதிகள், 24.63% 262 தொகுதிகள், 37.22% 9 தொகுதிகள்
வென்ற தொகுதிகள் 336 59 37[1]
மாற்றம் 204 203 28
மொத்த வாக்குகள் 171,459,286 106,760,001 18,111,579[2]
விழுக்காடு 31.1% 19.4% 3.27%
மாற்றம் 6.47% 17.82% 1.60%

தேசிய மற்றும் பிராந்திய வாரியாக கூட்டணிகளின் முடிவுகள்
16வது மக்களவை

முந்தைய பிரதமர்

மன்மோகன் சிங்
காங்கிரசு

பிரதமராகத் தெரிவு

நரேந்திர மோதி
பாஜக

பதினைந்தாவது மக்களவையின் பதவிக்காலம் மே 31 இல் முடிவடைவதற்கு 15 நாட்களுக்கு முன்னர், 2014 மே 16 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 989 வாக்குகள் எண்ணும் நிலையங்கள் நாடெங்கும் அமைக்கப்பட்டன.[6] சராசரியாக 66.38 வீதமானோர் இத்தேர்தலில் வாக்களித்தனர். இம்முறையே இந்தியத் தேர்தல் வரலாற்றில் மிக அதிகமாக வாக்களிக்கப்பட்டது.[6] தேசிய சனநாயகக் கூட்டணி 336 தொகுதிகளைக் கைப்பற்றியது. இக்கூட்டணியின் முக்கிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி 282 இடங்களைக் கைப்பற்றி தனித்து ஆட்சியமைக்கக்கூடிய பெரும்பான்மையைப் பெற்றது. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 59 தொகுதிகளை மட்டும் கைப்பற்றியது. இவற்றில் இந்திய தேசிய காங்கிரசு 44 இடங்களைக் கைப்பற்றியது.[7]

குற்றப் பின்னணி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களில் 34 விழுக்காட்டினர் குற்ற வழக்குகளில் தொடர்புடையர்கள் என தேர்தல் ஆணையத்திடம் தாங்களே அறிவித்துள்ளனர்.[8]

பின்னணி

இந்திய அரசியலமைப்பின் படி, மக்களவைக்கான தேர்தல்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தைக் முன்கூட்டியே கலைக்கும் போது நடைபெறுகின்றன. 15வது மக்களவைக்காக நடத்தப்பட்ட முந்தைய தேர்தல் 2009 ஏப்ரல்-மே மாதங்களில் இடம்பெற்றன. இதன் காலம் 2014 மே 31 இல் முடிவடைய வேண்டும். 16வது மக்களவைக்கான தேர்தல்கள் தேர்தல் ஆணையத்தால் முதற்தடவையாக ஒன்பது கட்டங்களாக நடத்தப்பட்டன.

2009 தேர்தல்களின் பின்னர் அண்ணா அசாரே தலைமையில் நடத்தப்பட்ட இலஞ்ச ஒழிப்பு இயக்கம், மற்றும் ராம்தேவ் சுவாமிகள், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரால் நடத்தப்பட்ட இதே போன்ற போராட்டங்கள் நாட்டில் அரசியல் எழுச்சியை ஏற்படுத்தியிருந்தன.[9] கெச்ரிவால் 2012 இல் ஆம் ஆத்மி கட்சி என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தார். ஆந்திராவில் இருந்து தெலுங்கானா என்ற தனி மாநிலத்தை உருவாக்க தெலுங்கானா இயக்கம் நடத்தப்பட்டது. ஆந்திரா முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் இறப்பை அடுத்து ஆந்திராவிலும் அரசியல் குழப்ப நிலை உருவானது. அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பித்தார்.

15வது மக்களவையின் கடைசி அமர்வு 2014 பெப்ரவரி 6 இல் ஆரம்பித்து பெப்ரவரி 21 இல் முடிவடைந்தது. கடைசி அமர்வில் ஊழலைக் கட்டுப்படுத்தும் லோக்பால் மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.[10]

தேர்தல் அட்டவணை

தேர்தல் ஏப்பிரல் 7 முதல் மே 12 வரை 9 கட்டங்களாக நடைபெற்றன[11][12]

மாநிலம் / யூனியன் பிரதேசம் மொத்தத் தொகுதிகள் தேர்தல் கட்டங்களும், தேதிகளும் [13]
  • கட்டம் 1
  • ஏப்ரல் 7, 2014
  • கட்டம் 2
  • ஏப்ரல் 9, 2014
  • கட்டம் 3
  • ஏப்ரல் 10, 2014
  • கட்டம் 4
  • ஏப்ரல் 12, 2014
  • கட்டம் 5
  • ஏப்ரல் 17, 2014
  • கட்டம் 6
  • ஏப்ரல் 24, 2014
  • கட்டம் 7
  • ஏப்ரல் 30, 2014
  • கட்டம் 8
  • மே 07, 2014
  • கட்டம் 9
  • மே 12, 2014
ஆந்திரா 42 - - - - - - 17 25 -
அருணாச்சலப் பிரதேசம் 2 - 2 - - - - - - -
அசாம் 14 5 - - 3 - 6 - - -
பீகார் 40 - - 6 - 7 7 7 7 6
சத்தீஸ்கர் 11 - - 1 - 3 7 - - -
கோவா 2 - - - 2 - - - -
குஜராத் 26 - - - - - - 26 - -
அரியானா 10 - - 10 - - - - - -
இமாசலப் பிரதேசம் 4 - - - - - - - 4 -
ஜம்மு & காஷ்மீர் 6 - - 1 - 1 1 1 2 -
ஜார்கந்த் 14 - - 5 - 5 4 - - -
கர்நாடகா 28 - - - - 28 - - - -
கேரளா 20 - - 20 - - - - - -
மத்தியப் பிரதேசம் 29 - - 9 - 10 10 - - -
மகாராஷ்டிரா 48 - - 10 - 19 19 - - -
மணிப்பூர் 2 - 1 - - 1 - - - -
மேகாலயா 2 - 2 - - - - - - -
மிசோரம் 1 - 1 - - - - - - -
நாகலாந்து 1 - 1 - - - - - - -
ஒடிசா 21 - - 10 - 11 - - - -
பஞ்சாப் 13 - - - - - - 13 - -
ராஜஸ்தான் 25 - - - - 20 5 - - -
சிக்கிம் 1 - - - 1 - - - - -
தமிழ்நாடு 39 - - - - - 39 - - -
திரிபுரா 2 1 - - 1 - - - - -
உத்தரப் பிரதேசம் 80 - - 10 - 11 12 14 15 18
உத்தராகண்டம் 5 - - - - - - - 5 -
மேற்கு வங்கம் 42 - - - - 4 6 9 6 17
அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1 - - 1 - - - - - -
சண்டிகர் 1 - - 1 - - - - - -
தாத்ரா நகர் ஹாவேலி 1 - - - - - - 1 - -
தாமன் தையு 1 - - - - - - 1 - -
இலட்சத்தீவுகள் 1 - - 1 - - - - - -
டெல்லி 7 - - 7 - - - - - -
புதுச்சேரி 1 - - - - - 1 - - -
வாக்குப்பதிவு நடக்கும் தொகுதிகள் 543 6 7 92 7 122 117 89 64 41
எந்தெந்தக் கட்டங்களில், மாநிலங்களின் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது என்பதனைக் காட்டும் புவியியல் வரைபடம்

இந்தியத் தேர்தல் ஆணையம் மிசோரமின் தேர்தல் தேதியை ஏப்பிரல் 9 லிருந்து ஏப்பிரல் 11க்கு மாற்றியது.[14][15]

கூட்டணி

ஆம் ஆத்மி கட்சி

  • ஆம் ஆத்மி கட்சி தங்கள் சார்பில் போட்டியிடும் 20 தொகுதிகளையும் அவற்றுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தது.[16]
  • ஆஆகட்சி இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தங்கள் சார்பில் போட்டியிடும் 30 தொகுதிகளையும் அவற்றுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தது.[17]
  • இதன் மூன்றாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் போட்டியிடும் 20 தொகுதிகளும் அவற்றுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்[18]
  • நான்காவது வேட்பாளர் பட்டியலை வெளியிடப்பட்டது.[19]
  • ஐந்தாவது வேட்பாளர் பட்டியலில் 50 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர் [20][21]
  • ஆறாவது வேட்பாளர் பட்டியலில் 55 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்[22]
  • ஏழாவது வேட்பாளர் பட்டியலில் 26 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்[23]
  • எட்டாவது வேட்பாளர் பட்டியலில் 19 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்[24]
  • ஒன்பதாவது வேட்பாளர் பட்டியலில் 30[25] வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்
  • பத்தாவது வேட்பாளர் பட்டியலில் 22 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்[26]
  • பதினொன்றாவது வேட்பாளர் பட்டியலில் 11 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர் [27]
  • பன்னிரெண்டாவது வேட்பாளர் பட்டியலில் 35 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்[28]
  • பதிமூன்றாவது வேட்பாளர் பட்டியலில் 22 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்[29]
  • பதினான்காவது வேட்பாளர் பட்டியலில் 19 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்[30]

காங்கிரசு

  • காங்கிரசு மகாராட்டிரத்தில் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது.
  • பீகாரில் இராச்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்துள்ளது.
  • காங்கிரசு தன் முதல் வேட்பாளர் பட்டியலில் 194 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. நந்தன் நிலெக்கணி, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.[31]
  • காங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த மத்தியப் பிரதேச இண்ட் தொகுதி வேட்பாளர் பாக்கிரத் பிரசாத் வேட்பாளர் பட்டியல் வெளியான பின் பாசகவில் இணைந்தார்.[32]
  • இரண்டாவது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.[33]
  • 58 பேர் உடைய மூன்றாவது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது [34].
  • 50 பேர் உடைய நான்காவது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது[35]
  • 26 பேர் உடைய ஐந்தாவது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது [36]
  • 16 பேர் உடைய ஆறாவது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது[37]
  • 12 பேர் உடைய ஏழாவது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது[38]

பாஜக

  • பாஜக தங்கள் சார்பில் போட்டியிடும் 54 தொகுதிகளையும் அவற்றுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தது.[39][40]
  • இரண்டாவது பட்டியலில் எதியூரப்பா உள்ளிட வேட்பாளர்கள் 52 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டனர்.[41]
  • 97 பேர் கொண்ட மூன்றாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.[42]
  • 93 பேர் கொண்ட நான்காவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது [43]
  • 67 பேர் கொண்ட ஐந்தாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது[44]
  • 14 பேர் கொண்ட ஆறாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது[45]
  • 14 பேர் கொண்ட ஏழாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது[46]
  • கோவா விகாஷ் கட்சி பாசகவுக்கு ஆதரவு தெரிவித்தது.[47]

பொதுவுடமைவாதிகள்

மூன்றாவது அணி

காங்கிரசு, பாசக கூட்டணியில் அல்லாத அதிமுக, சமாஜ்வாதி கட்சி, இந்திய பொதுவுடமைக் கட்சி, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்), ஜனதா தளம் (மதசார்பற்ற), ஜனதா தளம் (ஐக்கிய), பிஜு ஜனதா தளம், அசாம் கன பரிசத், பார்வர்டு பிளாக், புரட்சிகர சோஷலிசக் கட்சி, ஜார்கண்ட் விகாஷ் மோர்சா [50] ஆகிய 11 கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்கியுள்ளன.

மாநிலங்கள்

தமிழ்நாடு

கேரளா

மகாராட்டிரம்

பீகார்

  • 2002ல் பாசக தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகிய இராம்விலாஸ் பாசுவானின் லோக் சனசக்தி கட்சி பாசகவுடன் தேர்தல் கூட்டணி வைக்க உள்ளது.[52]
  • காங்கிரசும் இராச்டிரிய ஜனதா தளமும் தேசியவாத காங்கரசும் கூட்டணி உடன்பாடு கண்டன.[53] இதன் படி காங்கிரசு 12 தொகுதியிலும் தேசியவாத காங்கிரசு ஒரு தொகுதியிலும் இராச்டிரிய ஜனதா தளம் 27 தொகுதியிலும் போட்டியிடும்.[54]
  • ஜனதாதளம் (ஐக்கிய) முதல் பட்டியலில் 15 வேட்பாளர்களை அறிவித்தது.[55]

உத்திரப் பிரதேசம்

  • சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் எதிர்த்து வேட்பாளர்களை சமாஜ்வாதி கட்சி நிறுத்தாது என்று உபி முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறினார்[56]
  • காங்கிரசு ராஷ்டிரிய லோக்தளத்திற்கு 8 தொகுதிகளையும் அப்னா தளத்திற்கு 3 தொகுதிக்களையும் மேற்கு உத்திரப் பிரதேசத்தில் ஒதுக்கியது [57]
  • பகுஜன் சமாஜ் கட்சி 80 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது[58]

மேற்கு வங்காளம்

  • பாசக வட வங்காள கட்சியான கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவுடன் உடன்பாடு கண்டது.[59]

ஒடியா

  • இங்கு மக்களவைத்தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. பிஜு ஜனதா தளம் தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.[60][61]

அரியானா

இந்திய தேசிய லோக்தளம் அரியானாவின் பத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது.[62] அரியானாவின் 10 தொகுதிகளில் பாசக 8 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான அரியானா ஜாங்கிட் காங்கிரசு 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.[63]

ஆந்திரப் பிரதேசம்

பாசகவும் தெலுங்கு தேசமும் இணைந்து போட்டியிடுகின்றன. தெலுங்கானாவில் பாசக 8 மக்களவை தொகுதிகளிலும் 47 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும். சீமாந்திராவில் பாசக 5 மக்களவை தொகுதிகளிலும் 15 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் [64]

வாக்குப்பதிவு

முதற்கட்டம்[65]

மாநிலம்வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கைவாக்குப்பதிவு சதவீதம்
அசாம்576
திரிபுரா185

இரண்டாம் கட்டம்[66]

மாநிலம்வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கைவாக்குப்பதிவு சதவீதம்
நாகலாந்து184.64
மணிப்பூர்177.43
மேகாலயா266
அருணாச்சலப் பிரதேசம்271

மூன்றாம் கட்டம்[67][68][69][70]

மாநிலம்வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கைவாக்குப்பதிவு சதவீதம்
பீகார்6எடுத்துக்காட்டு
சத்தீஸ்கர்151.4
அரியானா1073
ஜம்மு & காஷ்மீர்168
ஜார்கந்த்558
கேரளா2073.4
மத்தியப் பிரதேசம்954.98
மகாராஷ்டிரா1054.13
ஒடிசா1067
உத்தரப் பிரதேசம்1065
அந்தமான் நிக்கோபார் தீவுகள்167
சண்டிகர்174
இலட்சத்தீவுகள்171.34
டெல்லி764

மிசோரம்

மிசோரமின் ஒரு மக்களவைத்தொகுதிக்கு ஏப்பிரல் 11 அன்று நடந்த தேர்தலில் 61.70% வாக்குகள் பதிவாகின.[71] ஏப்பிரல் 11 அன்று மிசோரமில் மட்டுமே வாக்குப்பதிவு நடந்தது.

நான்காம் கட்டம்[72][73]

மாநிலம்வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கைவாக்குப்பதிவு சதவீதம்
கோவா275
அசாம்375
திரிபுரா181.8
சிக்கிம்176

ஐந்தாம் கட்டம்[74][75][76][77][78]

மாநிலம்வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கைவாக்குப்பதிவு சதவீதம்
பீகார்756
சத்தீஸ்கர்363.44
ஜம்மு & காஷ்மீர்169
ஜார்கந்த்562
கர்நாடகா2867.28%[79]
மத்தியப் பிரதேசம்1054
மகாராஷ்டிரா1962
மணிப்பூர்174
ஒடிசா1173.4%[80]
ராஜஸ்தான்2063.26
உத்தரப் பிரதேசம்1163
மேற்கு வங்கம்479

ஆறாம் கட்டம்[81][82]

மாநிலம்வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கைவாக்குப்பதிவு சதவீதம்
அசாம்677.05
பீகார்760
சத்தீஸ்கர்766
ஜம்மு & காஷ்மீர்128
ஜார்கந்த்463.55
மத்தியப் பிரதேசம்1064.4
மகாராஷ்டிரா1955.33
ராஜஸ்தான்559.2
தமிழ்நாடு3973.67%[83]
உத்தரப் பிரதேசம்1260.2
மேற்கு வங்கம்682
புதுச்சேரி183

ஏழாம் கட்டம்[84][85]

மாநிலம்வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கைவாக்குப்பதிவு சதவீதம்
ஆந்திரப் பிரதேசம்1770
பீகார்760
குசராத்2662
ஜம்மு & காஷ்மீர்125.62
பஞ்சாப்1373
உத்தரப் பிரதேசம்1457.1
மேற்கு வங்கம்981
தாத்ரா நகர் ஹாவேலி185
தாமன் தையு176

எட்டாம் கட்டம்[86]

மாநிலம்வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கைவாக்குப்பதிவு சதவீதம்
ஆந்திரப் பிரதேசம்2576
பீகார்758
இமாசலப் பிரதேசம்465
ஜம்மு & காஷ்மீர்239.6
உத்தரப் பிரதேசம்1555.52
உத்தராகண்டம்562
மேற்கு வங்கம்681

ஒன்பதாம் கட்டம்[87]

மாநிலம்வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கைவாக்குப்பதிவு சதவீதம்
பீகார்658
உத்தரப் பிரதேசம்1855.29
மேற்கு வங்கம்1779.96

இந்தியஅளவில் மொத்த வாக்குப்பதிவு சதவீதம்

9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள இந்த தேர்தலில், ஒட்டுமொத்தமாக 66.38 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.பாராளுமன்றத் தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகி இருப்பது, சுதந்திர இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்

இதற்கு முன்பு அதிக அளவாக, கடந்த 1984-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 64.01 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன[88][89]

தேர்தல் செலவு

16-வது இந்திய மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கு இந்திய நடுவண் அரசு 3,426 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இத்தொகை கடந்த மக்களவை தேர்தல் நடத்துவதற்கு ஆனதைக் காட்டிலும் 131 விழுக்காடு அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. இத்தொகையில் தேர்தல் பாதுகாப்புச் செலவு சேர்க்கப்படவில்லை. தேர்தல் பாதுகாப்புச் செலவினை அந்தந்த மாநிலங்களே ஏற்றுக் கொண்டன.[90][91]

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்

தேர்தல் ஆணையத்தின் கட்டளைப்படி இந்திய மக்களவைத் தேர்தல் 2014 முடிந்த நாளான மே மாதம், 12-ஆம் நாள், மாலை 6.30க்கு பின் செய்தி ஊடகங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் சேர்ந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாயின.[92]

நிறுவனம் வெளியான நாள் வெற்றி கணிப்புகள்
சிஎன்என்-ஐபிஎன்[93] 12 மே 2014 பஜக+276 (±6), காங்கிரஸ் + 97 (±5), மற்றவர்கள் 148 (±23)
இந்தியா டூடே[93] 12 மே 2014 பஜக+ 272 (±11), காங்கிரஸ்+ 115 (±5), மற்றவர்கள் 156 (±6)
டைம்ஸ் நவ்+ஓஆர்ஜி[93] 12 மே 2014 பஜக+ 249, காங்கிரஸ்+ 148, மற்றவர்கள் 146
ஏபிப்பி நியுஸ்+நீல்சென்[93][94] 12 மே 2014 பஜக+ 274, காங்கிரஸ்+ 97, மற்றவர்கள் 165
இந்தியா டி.வி + சிவோட்டர்[93] 12 மே 2014 பஜக+ 289, காங்கிரஸ்+ 101, மற்றவர்கள் 148
நியுஸ் 24+சாணக்கியா[[93][95] 12 மே 2014 பஜக+ 340 (±14), காங்கிரஸ்+ 70 (±9), மற்றவர்கள் 133 (±11)
தேர்தல்களின் தேர்தல்[93] 12 மே 2014 பஜக+ 283, காங்கிரஸ்+105, மற்றவர்கள் 149

தேர்தல் முடிவுகள்

விரிவான தரவுகளுக்கு -

336 147 60
தேஜகூ ஏனைய ஐமுகூ
கட்சி பாஜக இதேகா அதிமுக அஇதிகா பிஜத சிசே தெதேக
தலைவர் நரேந்திர மோதி ராகுல் காந்தி ஜெ. ஜெயலலிதா மம்தா பானர்ஜி நவீன் பட்நாய்க் உதாவ் தாக்கரே சந்திரபாபு நாயுடு
வாக்குகள் 31.0%, 171,637,684 19.3%, 106,935,311 3.3%, 18,115,825 3.8%, 21,259,681 1.7%, 9,491,497 1.9%, 10,262,982 2.5%, 14,094,545
தொகுதிகள் 282 (51.9%) 44 (8.1%) 37 (6.8%) 34 (6.2%) 20 (3.6%) 18 (3.3%) 16 (2.9%)
282 / 543
44 / 543
37 / 543
34 / 543
20 / 543
18 / 543
16 / 543


தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள்

  தேசகூ (31.0%)
  ஐமுகூ (19.3%)
  பசக (4.1%)
  திக (3.8%)
  சக (3.4%)
  ஏனைய (31.8%)

கட்சி வாரியாக வெற்றி விவரம்


2014 இந்தியப் பொதுத்தேர்தல் முடிவுகளின் விவரம்
கட்சிவாக்குகள்தொகுதிகள்
எண்%+/-எண்+/-%
பாரதிய ஜனதா கட்சிBJP171,657,54931.0%12.2%28216651.9%
இந்திய தேசிய காங்கிரசுINC106,938,24219.3%9.3%441628.1%
அண்ணா திமுகADMK18,115,8253.3%1.6%37286.8%
திரிணாமுல் காங்கிரசுAITC21,259,6843.8%0.6%34156.3%
பிஜு ஜனதா தளம்BJD9,491,4971.7%0.1%2063.7%
சிவ சேனாSHS10,262,9821.9%0.3%1873.3%
தெலுங்கு தேசம் கட்சிTDP14,094,5452.5%16102.9%
தெலுங்கானா இராஷ்டிர சமிதிTRS6,736,4901.2%0.6%1192.0%
மார்க்சியக் கம்யூனிசக் கட்சிCPM17,986,7733.2%2.1%971.7%
ஒய்எஸ்ஆர் காங்கிரசுYSRCP13,991,2802.5%New9New1.7%
தேசியவாத காங்கிரசு கட்சிNCP8,635,5541.6%0.4%631.1%
லோக சனசக்தி கட்சிLJP2,295,9290.4%0.1%661.1%
சமாஜ்வாதி கட்சிSP18,672,9163.4%5180.9%
ஆம் ஆத்மி கட்சிAAP11,325,6352.0%New4New0.7%
இராச்டிரிய ஜனதா தளம்RJD7,442,3231.3%40.7%
அகாலி தளம்SAD3,636,1480.7%0.3%40.7%
அனைத்திந்திய ஐக்கிய சனநாயக முன்னணிAIUDF2,333,0400.4%0.1%320.6%
ராச்டிரிய லோக் சமதா கட்சிRLSP1,078,4730.2%New3New0.6%
ஐக்கிய ஜனதா தளம்JD(U)5,992,1961.1%0.4%2180.4%
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)JS(S)3,731,4810.7%0.1%210.4%
இந்திய தேசிய லோக் தள்INLD2,799,8990.5%0.2%220.4%
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா JMM1,637,9900.3%0.1%20.4%
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்IUML1,100,0960.2%0.2%220.4%
அப்னா தள்AD821,8200.1%220.4%
இந்தியப் பொதுவுடமைக் கட்சிCPI4,327,2970.8%0.6%130.2%
பாட்டாளி மக்கள் கட்சிPMK1,827,5660.3%0.2%110.2%
Revolutionary Socialist PartyRSP1,666,3800.3%0.1%110.2%
சுவாபிமானி பக்சSWP1,105,0730.2%0.1%10.2%
நாகாலாந்து மக்கள் முன்னணிNPF994,5050.2%10.2%
பகுஜன் சமாஜ் கட்சிBSP22,946,1824.1%2.1%0210.0%
திராவிட முன்னேற்றக் கழகம்DMK9,636,4301.7%0.1%0180.0%
தேசிய முற்போக்கு திராவிட கழகம்DMDK2,079,3920.4%0.4%00.0%
சார்க்கந்து விகாசு மோக்சாJVM1,579,7720.3%0.1%010.0%
மறுமலர்ச்சி திமுகMDMK1,417,5350.4%0.1%010.0%
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்குAIFB1,211,4180.2%0.1%020.0%
கம்யூனிஸ்ட் (மார்க்சிய-லெனினிய) விடுதலைCPI(ML)(L)1,007,2740.2%00.0%
பகுஜன் முக்தி கட்சிBMP785,3580.1%00.0%
சுயேட்சைIND16,743,7193.0%2.2%360.6%
ஏனையோர்81.4%
நோட்டாNOTA6,000,1971.1%புதியது0புதியது0.0%
செல்லுபடியான வாக்குகள்100.00%543100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
மொத்த வாக்குகள்66.4%
பதிவு செய்த வாக்காளர்கள்
மூலம்: இந்தியத் தேர்தல் ஆணையம்

வேறு தகவல்கள்

  • 1952 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் மிகக் குறைந்தளவு முஸ்லிம் உறுப்பினர்கள் 2014 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 16வது மக்களவை 24 முசுலிம் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். இது 15வது மக்களவை முசுலிம் உறுப்பினர்களை விட 6 குறைவாகும். மக்களவையின் மொத்த உறுப்பினர்களில் இது 4.4 விழுக்காடாகும். 1952 தேர்தலில் 4.3% முசுலிம்கள் வெற்றி பெற்றனர். இவ்வெண்ணிக்கை பின்னர் 5 முதல் 6 வீதம் வரை அதிகரித்து 1980 தேர்தலில் 9.3 வீதமாக அதிகரித்தது. அப்போது 49 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[96]
  • இந்திய தேசிய காங்கிரசு தமிழ்நாட்டில் போட்டியிட்ட 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் கட்டுப்பணத்தை இழந்தது.[97]
  • இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட குஜராத், இராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், தில்லி, இமாசல பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகண்ட், ஒடிசா, சீமாந்திரா (சூன் முதல் இது புதிய மாநிலமாக உருவாகிறது) மற்றும் கோவா முதலிய மாநிலங்களில் எத்தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
  • பாரதிய சனதாவின் 7 முசுலிம் வேட்பாளர்களில் ஒருவரும் வெற்றிபெற வில்லை. கூட்டணி கட்சியான லோக் ஜன சக்தி சார்பில் ஒரு முசுலிம் வேட்பாளர் வெற்றிபெற்றார்.[98]

நோட்டா வாக்குகள்

  • 543 தொகுதிகளின் மொத்த வாக்குகளில் 1.1 % (59,97,054) நோட்டா வாக்குகள் பதிவாகியுள்ளது.
  • இந்திய அள்வில் அதிக பட்சமாக தமிழ்நாட்டில் நீலகிரி மக்களவைத் தொகுதிஇல் 45,559 நோட்டா வாக்குகள் பதிவாகியுள்ளது.
  • தமிழ்நாட்டில் 39 தொகுதிகளின் மொத்த வாக்குகளில் 1.4 சதவீதம் (5,82,062) நோட்டா வாக்குகள் பதிவாகியுள்ளது.

இதையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Performance of State Parties". ECI.
  2. http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/article6039597.ece
  3. "Number of Registered Voters in India reaches 814.5 Mn in 2014". Indo-Asian News Service. news.biharprabha.com. http://news.biharprabha.com/2014/02/number-of-registered-voters-in-india-reaches-814-5-mn-in-2014/. பார்த்த நாள்: 23 பெப்ரவரி 2014.
  4. "India announces election dates". அல்ஜசீரா. பார்த்த நாள் 14 மார்ச் 2014.
  5. "Election 2014 live blog". பார்த்த நாள் 16 மே 2014.
  6. "Partywise Trends & Result". பார்த்த நாள் 17 மே 2014.
  7. நமது தலைவர்கள்
  8. "Lok Sabha election 2014 predictions Survey – Opinion Poll". Seekers Find .in (28 சனவரி 2013).
  9. "Stormy session marks Indian Parliament's last session before 2014 elections". Arabnews.com (6 பெப்ரவரி 2014).
  10. "Lok Sabha elections to be held in 9 phases from April 7 to May 12, counting on May 16". இந்துஸ்தான் டைம்சு. பார்த்த நாள் 5 மார்ச் 2014.
  11. "Lok Sabha polls 2014: Nine-phase election from April 7, results on May 16". சீநியூஸ். பார்த்த நாள் 5 மார்ச் 2014.
  12. "General Elections – 2014 : Schedule of Elections" (PDF) (2014-03-05). பார்த்த நாள் 2014-03-05.
  13. "EC defers Mizoram polls 72-hour shutdown called off". The Telegraph Calcutta. பார்த்த நாள் 9 ஏப்ரல் 2014.
  14. "Election Commision of India Notification PDF". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் 9 ஏப்ரல் 2014.
  15. "List of AAP Candidates Contesting LS Polls". The New Indian Express. பார்த்த நாள் 24 பெப்ரவரி 2014.
  16. "Rediff.com » News » AAP 2nd list out; Gandhi grandson vs Dikshit's son in Delhi AAP 2nd list out; Gandhi grandson vs Dikshit's son in Delhi". rediff. பார்த்த நாள் 27 பெப்ரவரி 2014.
  17. "Jaspal Bhatti's wife Savita in AAP's third list of Lok Sabha candidates". indiatoday.. பார்த்த நாள் 1 மார்ச் 2014.
  18. "AAP announces 4th list for LS polls, fields journalist Ashish Khetan". IBN-LIVE. பார்த்த நாள் 10 மார்ச் 2014.
  19. "AAP fields former CNN, TIME journalist Anita Pratap from Kerala, releases 5th list". IBN-LIVE. பார்த்த நாள் 12 மார்ச் 2014.
  20. "5th Candidate List Announced – 2014 Elections". Aam Aadmi Party. பார்த்த நாள் 12 மார்ச் 2014.
  21. "AAP releases 6th list; Shazia Ilmi fielded from Ghaziabad". niticentral. பார்த்த நாள் 15 மார்ச் 2014.
  22. "LS polls: AAP releases 7th list, fields activist Uday Kumar from Kanyakumari". zeenews. பார்த்த நாள் 18 மார்ச் 2014.
  23. "AAP releases eighth list, fields Parveen Amanullah against Shatrughan Sinha in Bihar". NDTV. பார்த்த நாள் 19 மார்ச் 2014.
  24. "AAP out 9th Candidate List for LS Poll 2014". upelection. பார்த்த நாள் 25 மார்ச் 2014.
  25. "AAP fields Phiroze Palkhivala against Priya Dutt in Mumbai". dnaindia. பார்த்த நாள் 25 மார்ச் 2014.
  26. "AAP releases 11th list of candidates from four states". ibnlive. பார்த்த நாள் 25 மார்ச் 2014.
  27. "AAP releases 12th list of candidates for Lok Sabha elections". IBN LIVE. பார்த்த நாள் 3 ஏப்ரல் 2014.
  28. "AAP releases 13th list for 22 Lok Sabha constituencies". timesofindia. பார்த்த நாள் 3 ஏப்ரல் 2014.
  29. "AAP releases 14th list of candidates for Lok Sabha elections". IBN LIVE. பார்த்த நாள் 3 ஏப்ரல் 2014.
  30. "Congress first list: Cricketer Mohd Kaif, Nandan Nilekani, Ravi Kishen among 194 candidates for Lok Sabha polls". indianexpress. பார்த்த நாள் 8 மார்ச் 2014.
  31. "He got a Congress ticket yesterday, joined BJP today". NdTV. பார்த்த நாள் 9 மார்ச் 2014.
  32. "Congress 2nd list with 71 names out; Pawan Bansal's back". rediff. பார்த்த நாள் 13 மார்ச் 2014.
  33. "Congress names 58 candidates in 3rd list, suspense over Varanasi continues". IBN-LIVE. பார்த்த நாள் 18 மார்ச் 2014.
  34. "Congress 4th list out, Chidambaram not to fight 2014 polls". IBNLIVE. பார்த்த நாள் 20 மார்ச் 2014.
  35. "Congress releases 5th list: Capt Amrinder to take on Jaitley, Ambika Soni gets Anandpur Sahib ticket". indiatvnews. பார்த்த நாள் 25 மார்ச் 2014.
  36. "Congress releases sixth list of candidates for Lok Sabha elections, no candidate from Varanasi yet". NDTV. பார்த்த நாள் 25 மார்ச் 2014.
  37. "Lok Sabha: Congress names 7th list". newsmantri. பார்த்த நாள் 25 மார்ச் 2014.
  38. "BJP names 54 candidates for Lok Sabha polls, Gadkari to contest from Nagpur". indiatoday. பார்த்த நாள் 27 பெப்ரவரி 2014.
  39. "After Modi-Rajnath meet, BJP releases 1st candidate list for LS Poll". oneindia.. பார்த்த நாள் 27 பெப்ரவரி 2014.
  40. "Yeddyurappa among 52 Bharatiya Janata Party candidates for Lok Sabha polls". indianexpress. பார்த்த நாள் 8 மார்ச் 2014.
  41. "BJP's Sushma Swaraj to contest Lok Sabha polls from Vidisha constituency". NDTV. பார்த்த நாள் 13 மார்ச் 2014.
  42. "BJP's fourth list: Narendra Modi to contest from Varanasi, Rajnath Singh from Lucknow and Murli Manohar Joshi from Kanpur". Economictimes. பார்த்த நாள் 16 மார்ச் 2014.
  43. "BJP fields Modi from Vadodara too, Advani to contest from Gandhinagar". NitiCentral. பார்த்த நாள் 19 மார்ச் 2014.
  44. "BJP releases 6th list of candidates, fields Bappi Lahiri from Srerampur, Sriramulu from Bellary". niticentral. பார்த்த நாள் 25 மார்ச் 2014.
  45. "Bappi Lahiri, Sriramulu in BJP's seventh list". hindustantimes. பார்த்த நாள் 3 ஏப்ரல் 2014.
  46. "Goa Vikas party pledges support for BJP in Lok Sabha election". timesofindia. பார்த்த நாள் 3 ஏப்ரல் 2014.
  47. "CPM announces 1st list of candidates for Lok Sabha polls". timesofindia. பார்த்த நாள் 2 மார்ச் 2014.
  48. "LS polls: CPI (M) releases first list". thehindu. பார்த்த நாள் 2 மார்ச் 2014.
  49. "11-party ‘alternative’ front has BJD, AGP missing". indianexpress. பார்த்த நாள் 25 பெப்ரவரி 2014.
  50. "Congress, NCP finalise seat-sharing numbers for Lok Sabha polls". பார்த்த நாள் 10 பெப்ரவரி 2014.
  51. "Ram Vilas Paswan's party returns to NDA, agrees on seat-sharing pact with BJP". NDTV. பார்த்த நாள் 27 பெப்ரவரி 2014.
  52. "Congress-RJD seal seat sharing alliance for Lok Sabha polls in Bihar". zeenews. பார்த்த நாள் 7 மார்ச் 2014.
  53. "Congress clinches a deal with RJD in Bihar; RJD pockets 27 seats, leaving 12 for Congress". .economictimes. பார்த்த நாள் 7 மார்ச் 2014.
  54. "JD(U) announces first list of candidates". timesofindia. பார்த்த நாள் 15 மார்ச் 2014.
  55. "Won't field candidates against the Gandhis, says Akhilesh Yadav". NDTV. பார்த்த நாள் 10 மார்ச் 2014.
  56. "Congress gives 8 seats to RLD in UP". The Hindu. பார்த்த நாள் 10 மார்ச் 2014.
  57. "BSP declares all 80 Lok Sabha candidates in Uttar Pradesh". DNA-INDIA. பார்த்த நாள் 20 மார்ச் 2014.
  58. "GJM, BJP in poll pact for West Bengal". Sify. பார்த்த நாள் 10 மார்ச் 2014.
  59. "BJD releases first list of candidates for LS, Assembly election". Niticentral. பார்த்த நாள் 12 மார்ச் 2014.
  60. "Elections 2014: BJD's first list has three royals, one cine-star, one sportsman". NDTV. பார்த்த நாள் 12 மார்ச் 2014.
  61. "INLD names ex-BSP man Gurgaon candidate". Times of India. பார்த்த நாள் 14 மார்ச் 2014.
  62. "In Haryana, BJP bets big on turncoats". DNA India. பார்த்த நாள் 6 ஏப்ரல் 2014.
  63. "BJP announces alliance with Chandrababu Naidu's TDP". NDTV. பார்த்த நாள் 6 ஏப்ரல் 2014.
  64. "மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல்: அஸ்ஸாமில் 76%, திரிபுராவில் 85% வாக்குப்பதிவு". தினமணி. பார்த்த நாள் 8 ஏப்ரல் 2014.
  65. "Moderate to heavy turnout in phase 2". தி இந்து. பார்த்த நாள் 10 ஏப்ரல் 2014.
  66. "High turnout in third phase". தி இந்து. பார்த்த நாள் 19 ஏப்ரல் 2014.
  67. "3ஆவது கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: கேரளம், ஹரியாணா -73%, உ.பி.- 65%, தில்லி-64%,". தினமணி. பார்த்த நாள் 19 ஏப்ரல் 2014.
  68. "Lok Sabha Election 2014: Third phase polling sees high voter turnout". IndiaToday. பார்த்த நாள் 19 ஏப்ரல் 2014.
  69. "Lok Sabha polls, Phase 3: As it happened". ZeeNews. பார்த்த நாள் 19 ஏப்ரல் 2014.
  70. "Elections 2014: Record 68.29 per cent turnout in first four phases". NDTV. பார்த்த நாள் 19 ஏப்ரல் 2014.
  71. "மக்களவை 4ஆம் கட்டத் தேர்தல்: அஸ்ஸாமில் 72%, திரிபுராவில் 82% வாக்குப்பதிவு". தினமணி. பார்த்த நாள் 19 ஏப்ரல் 2014.
  72. "Impressive turnout in phase 4". தி இந்து. பார்த்த நாள் 19 ஏப்ரல் 2014.
  73. "12 மாநிலங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: மேற்கு வங்கம் 79%, மணிப்பூர் 74%, ஜார்க்கண்ட் 62%,]". தினமணி. பார்த்த நாள் 19 ஏப்ரல் 2014.
  74. "உ.பி.யில் 63%, ம.பி.யில் 54%". தினமணி. பார்த்த நாள் 19 ஏப்ரல் 2014.
  75. "Fifth phase witnesses heavy turnout". தி இந்து. பார்த்த நாள் 19 ஏப்ரல் 2014.
  76. "Maharashtra records 62% turnout". தி இந்து. பார்த்த நாள் 19 ஏப்ரல் 2014.
  77. "Rajasthan first phase: 63.26 per cent". தி இந்து. பார்த்த நாள் 19 ஏப்ரல் 2014.
  78. "Karnataka records 67.28 p.c. polling". தி இந்து. பார்த்த நாள் 19 ஏப்ரல் 2014.
  79. "Odisha records 74% turnout in two-phase polls". தி இந்து. பார்த்த நாள் 19 ஏப்ரல் 2014.
  80. "High turnout in sixth phase of Lok Sabha elections". indianexpress. பார்த்த நாள் 24 ஏப்ரல் 2014.
  81. "Lok Sabha polls, sixth phase: As it happened". zeenews. பார்த்த நாள் 24 ஏப்ரல் 2014.
  82. "தமிழகத்தில் 73.67% வாக்குப்பதிவு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு". தினமணி. பார்த்த நாள் 27 ஏப்ரல் 2014.
  83. "Elections 2014 Phase 7 round up: Bengal records 81 pc voter turnout; 73 pc polling in Punjab". indianexpress. பார்த்த நாள் 2 மே 2014.
  84. "Lok Sabha polls: High turnout in 7th phase, record 73% voting in Punjab". zeenews. பார்த்த நாள் 2 மே 2014.
  85. "Drama in Amethi, high turnout mark round 8 of LS elections". hindustantimes. பார்த்த நாள் 8 மே 2014.
  86. "Voter Turnout across three states in the 9th Phase of Voting". theindianrepublic. பார்த்த நாள் 12 மே 2014.
  87. "Highest ever turnout of 66.38% recorded in this Lok Sabha election". THE TIMES OF INDIA. பார்த்த நாள் 13 மே 2014.
  88. "இந்திய வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குப்பதிவு". தினத்தந்தி. பார்த்த நாள் 13 மே 2014.
  89. http://nadappu.com/16-th-loksabha-election-expences-3426-core/
  90. http://www.tamilsguide.com/details.php?nid=5&catid=115167
  91. Exit polls results only after 6.30 PM on May 12: Election Commission India Today
  92. Lok Sabha Exit Polls India Today
  93. ABP NEWS – NIELSEN EXIT POLL 2014 ABP News
  94. Lok Sabha 2014 – Exit Poll Today's Chanakya
  95. "Elections 2014: Lowest number of Muslim MPs since 1952". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (17 மே 2014). பார்த்த நாள் 17 மே 2014.
  96. "38 out of 39 Congress candidates forfeit deposits in Tamil Nadu". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (17 மே 2014). பார்த்த நாள் 17 மே 2014.
  97. "Muslim political representation in the 16th Lok Sabha". http://twocircles.net/.+பார்த்த நாள் 17 மே 2014.

உசாத்துணை

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.