இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் - இந்தியாவின் இரண்டாவது மிக உயர் பதவிக்குரியதாகும், குடியரசுத் தலைவருக்கு அடுத்த நிலையில் வரும் பதவியாகும். துணைக்குடியரசுத்தலைவரே நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் தலைவராவார். எனினும் இவருக்கு மாநிலங்களவை ஓட்டெடுப்பில் ஓட்டளிக்கும் உரிமை இல்லை. ஏனெனில் இவர் மாநிலங்களவை உறுப்பினர் அல்லர். எனினும் ஓட்டுக்கள் சமநிலையில் இருக்கும் போது இவர் ஓட்டளிக்கலாம்.
குடியரசுத் துணைத் தலைவர் இந்தியா
| |
---|---|
![]() இந்தியாவின் சின்னம் | |
வாழுமிடம் | இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் இல்லம், புது தில்லி |
பரிந்துரைத்தவர் | ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடது முன்னணி[1] |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள், புதுப்பிக்கவல்லது |
முதல் குடியரசுத் துணைத் தலைவர் | சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் மே 13, 1952 முதல் மே 12, 1962 வரை |
இறுதி குடியரசுத் துணைத் தலைவர் | முகம்மது அமீத் அன்சாரி |
ஊதியம் | ₹ 1,25,000 ($ 2808) ஒரு மாதத்திற்கு |
இணைய தளம் | இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் (ஆங்கில மொழியில்) |
இந்தியக் குடியரசு |
---|
![]() |
இந்திய அரசு வலைவாசல் |
தற்பொழுதய துணைக்குடியரசுத் தலைவர் மேதகு முகம்மது அமீத் அன்சாரி , இவர் ஆகஸ்டு 11, 2007 ஆண்டு இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆகத்து 7, 2012 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டவிதி 63 ல் குறிப்பிட்டுள்ளபடி துணைக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்யப்படுகின்றார். குடியரசுத் தலைவருக்கு கோரப்படும் அனைத்துத் தகுதிகளும் இவருக்கும் கோரப்படும். இந்தியக் குடிமகனாக இருத்தல் அவசியம்.
குடியரசுத் தலைவர் எதிர்பாராத இறப்பின் நிமித்தம் அல்லது அவர் பதவிக்காலம் முடிவுற்ற நிலை அல்லது அவர் பணியிலிருந்து நீங்குதல் போன்ற காலங்களில் துணைக்குடியரசுத் தலைவரே குடியரசுத் தலைவர் பதவியில் மீண்டும் புதியக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கும் வரையில் பதவி வகிப்பார்.
தேர்ந்தெடுக்கும் முறை
ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒரு முறை துணைக்குடியரசுத் தலைவர் பதவி முடிவுறும் சமயத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.
இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 67 பி ன் படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் அவருக்கு எதிரான தீர்மானத்தின் வாக்கெடுப்பில் (ஒட்டெடுப்பில்) வெற்றி பெற்றாலின்றி அவரை எவ்வகையிலும் நீக்கவியலாது.
ஊதியம்
துணைக்குடியரசுத் தலைவரின் ஊதியம் இந்திய அரசியலமைப்பில் வரையறுக்கப்படவில்லை. இருப்பினும் மாநிலங்களவைத் தலைவரின் அலுவல் நிலைக்காரணமாக அதற்கு நிகரான ஊதியம் வழங்கப்படுகின்றது.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள்
முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர்கள்.[2]
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- "UPA-Left names Ansari for Vice-President". PTI. த இந்து. 21 July 2007. http://www.hindu.com/2007/07/21/stories/2007072150080100.htm. பார்த்த நாள்: 28 August 2011.
- குடியரசுத் தலைவர்களின் பட்டியல் /குடியரசுத் துணைத் தலைவர்கள்
- பதவியில் இருந்த பொழுது இயற்கை எய்தினார்.
- இந்து ஆங்கில நாளிதழ் - அமீத் அன்சாரி, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றார்