இந்திய மாநில அரசுகள்

இந்தியாவில் மாநில அரசுகள் என்பன பட்டியலிடப்பட்ட 29 இந்திய மாநிலங்களை ஆட்சி செய்யும் அரசுகளாகும். ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கட்சியைச் சேர்ந்த அமைச்சரவை முதன்மை அமைச்சர் (பொதுவாக முதலமைச்சர்) ஒருவரால் தலைமையேற்று நடத்தப்படுகிறது. இவரே மாநில அரசில் அதிக அதிகாரம் பெற்றவராவார். இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 370 ன் படி சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் அதிகாரங்களை மத்திய மாநிலங்களுக்கு இடையே பிரித்து வழங்குகிறது. இதில் ராணுவம், வெளியுறவு போன்ற துறைகளை மத்திய அரசும் சட்டம் ஒழுங்கு காவல் போன்ற பணிகளை மாநில அரசுகளும் மேற்கொள்கின்றன. மாநில அரசுகளுக்கு வருமான மூலங்களாக விற்பனை வரி, பத்திரப் பதிவு வருமானம் முதலியன ஒதுக்கப்பட்டுள்ளன.

அவைகள்

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், உத்திரப்பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய ஆறு மாநிலங்களில் மட்டும் சட்டமன்றங்கள் கீழவை மற்றும் மேலவை என்ற இரட்டை அவைகள் ஆட்சியும் மற்றைய மாநிலங்களில் ஓரவை ஆட்சியும் நடைபெறுகின்றன.

அரசமைக்கப்படும் விதம்

மாநில ஆளுனர், மாநில வாக்காளர்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பெரும்பான்மை பெற்ற கட்சியை ஆட்சியமைக்க அழைக்கிறார். அதனைத் தொடர்ந்து தலைமை அமைச்சர் அல்லது முதலமைச்சர் தலைமையில் அவருக்கு உதவியாக சில அமைச்சர்களும் உறுதிமொழி எடுத்து ஆட்சியமைக்கின்றனர்.

அதிகாரப் பகிர்வு

மத்திய அரசிற்கும் மாநிலங்களுக்கும் இடையேயான அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஆராய்ந்து குறைகள் களைவதற்காக சர்காரியா குழு அமைக்கப்பட்டு அக்குழுவின் பரிந்துரைகள் சில செயல்படுத்தப்பட்டன.

பட்டியலிடப்பட்ட இந்தியா மாநிலங்கள்

மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளை குறிக்கும் இந்திய வரைபடம். விவரங்கள் இடதுபுறம் பட்டியலிடப்பட்டுள்ளன.
  1. ஆந்திரப் பிரதேசம்
  2. அருணாச்சல் பிரதேசம்
  3. அஸ்ஸாம்
  4. பீகார்
  5. சத்தீஸ்கர்
  6. கோவா
  7. குஜராத்
  8. அரியானா
  9. இமாசலப் பிரதேசம்
  10. ஜம்மு காஷ்மீர்
  11. ஜார்க்கண்ட்
  12. கர்நாடகம்
  13. கேரளம்
  14. மத்தியப் பிரதேசம்
  15. மகாராஷ்டிரம்
  16. மணிப்பூர்
  17. மேகாலயா
  18. மிசோரம்
  19. நாகாலாந்து
  20. ஒரிஸா
  21. பஞ்சாப்
  22. ராஜஸ்தான்
  23. சிக்கிம்
  24. தமிழ் நாடு
  25. திரிபுரா
  26. உத்தரகண்ட்
  27. உத்தரப் பிரதேசம்
  28. மேற்கு வங்காளம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.