இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்

இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் அல்லது முதன்மை ஆதரவுரைஞர் (அட்டர்னி ஜென்ரல் ஆப் இந்தியா, Attorney General of India) இந்தியக் குடியரசுத் தலைவரால் அரசியலமைப்பு சட்ட விதி 76[1] இன் படி நியமனம் செய்யப்படுகின்றார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களுக்குரியத் தகுதியுடையவர். இந்திய அரசுக்குரிய ஆலோசணைகளை வழங்குபவரும் இந்திய அரசின் சார்பில் வழக்காடுபவரும் இவரே ஆவார். இந்தியாவின் எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்காட அனுமதியுடையவர். இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டங்களின் விவாதங்களிலும் கலந்து கொள்ள உரிமை கொண்டவர். ஆனால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதியில்லை. இவருக்குத் துணைபுரிய ஒன்றிய அரசுத் தலைமை வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜென்ரல்) மற்றும் கூடுதல் ஒன்றிய அரசுத் தலைமை வழக்குரைஞர் (அடிசனல் சொலிசிட்டர் ஜென்ரல்) நால்வரும் உதவி புரிவர்.

மேற்கோள்கள்

  1. உச்ச நீதிமன்ற நீதிமறைமை-அட்டர்னி ஜென்ரல் பார்த்து பரணிடப்பட்ட நாள் 19-04-2009
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.