இந்தியப் பொதுத் தேர்தல், 1998

இந்தியக் குடியரசின் பன்னிரெண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் 1998 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு பன்னிரெண்டாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. எக்கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிட்டவில்லை. தனிப்பெரும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகி அடல் பிகாரி வாச்பாய் பிரதமரானார்.

இந்தியப் பொதுத் தேர்தல், 1998

பெப்ரவரி 16, 22, மற்றும் 28, 1998

மக்களவைக்கான 543 தொகுதிகள்
  First party Second party
 
தலைவர் அடல் பிகாரி வாச்பாய் சீதாராம் கேசரி
கட்சி பாஜக காங்கிரசு
கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி (இந்தியா) காங்கிரசு
தலைவரின் தொகுதி லக்னவ் போட்டியிடவில்லை
வென்ற தொகுதிகள் 254 144
மாற்றம் +25 +1
மொத்த வாக்குகள் 139,701,871 98,140,471
விழுக்காடு 37.21% 26.14%

முந்தைய இந்தியப் பிரதமர்

ஐ. கே. குஜரால்
ஐக்கிய முன்னணி

இந்தியப் பிரதமர்

அடல் பிகாரி வாச்பாய்
தேசிய ஜனநாயக கூட்டணி (இந்தியா)

பின்புலம்

இத்தேர்தலின் போது இந்திய மக்களவையில் 533 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் நேரடியாக நியமிக்கப்பட்ட இரு ஆங்கிலோ-இந்தியர்களும் இருந்தனர். முந்தைய தேர்தலுக்குப் பின் அமைந்த ஐக்கிய முன்னணி கூட்டணி அரசுகள் ஒற்றுமையின்மையால் இரு ஆண்டுகளுள் கவிழ்ந்தன. 1996ல் பிற கட்சிகள் எதுவும் ஆதரவளிக்க முன்வராததால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்த பாரதிய ஜனதா கட்சி இரு ஆண்டுகளுள் கூட்டணி அமைக்கும் முயற்சியில் வெற்றி கண்டது. அதிமுக, பாமக, மதிமுக, சிவ சேனா, லோக் சக்தி, அரியானா முன்னேற்றக் கட்சி, ஜனதா கட்சி, என். டி. ஆர். தெலுங்கு தேசம் (சிவபார்வதி) ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கியது. இக்கூட்டணி 254 இடங்களை வென்றது. அறுதிப்பெரும்பான்மை கிட்டவில்லையெனினிம், தனிப்பெரும் கூட்டணி என்பதால் குடியரசுத் தலைவர் தேஜ கூட்டணித் தலைவர் அடல் பிகாரி வாச்பாயை ஆட்சியமைக்க அழைத்தார். பிரதமரான பின் உதிரிக்கட்சிகள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் துணையுடன், 286 உறுப்பினர்களின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் வாச்பாய் நிரூபித்தார்.

முடிவுகள்

மொத்தம் 61.97% வாக்குகள் பதிவாகின.

கட்சி கூட்டணி % இடங்கள்
பாஜகதே.ஜ. கூட்டணி25.59%182
காங்கிரசுகாங்கிரசு25.82%141
சிபிஎம்ஐக்கிய முன்னணி5.40%32
சமாஜ்வாதி கட்சி4.93%20
அதிமுகதே.ஜ. கூட்டணி1.83%18
ராஷ்டிரீய ஜனதா தளம்ஜன மோர்ச்சா2.78%17
தெலுங்கு தேசம்2.77%12
சமதாக் கட்சிதே.ஜ. கூட்டணி1.76%12
சிபிஐஐக்கிய முன்னணி1.75%9
பிஜு ஜனதா தளம்தே.ஜ. கூட்டணி1.00%9
அகாலி தளம்தே.ஜ. கூட்டணி0.81%8
திரிணாமுல் காங்கிரசுதே.ஜ. கூட்டணி2.42%7
ஜனதா தளம்ஐக்கிய முன்னணி3.24%6
சுயேட்சைகள்2.37%6
சிவ சேனாதே.ஜ. கூட்டணி1.77%6
திமுகஐக்கிய முன்னணி1.44%6
பகுஜன் சமாஜ் கட்சிஜன மோர்ச்சா4.67%5
புரட்சிகர சோசலிச கட்சிஐக்கிய முன்னணி0.55%5
அரியானா லோக் தளம்0.53%4
பாமகதே.ஜ. கூட்டணி0.42%4
இந்தியக் குடியரசுக் கட்சி0.37%4
தமாகஐக்கிய முன்னணி1.40%3
லொக் சக்திதே.ஜ. கூட்டணி0.69%3
மதிமுகதே.ஜ. கூட்டணி0.44%3
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி0.21%3
ஃபார்வார்டு ப்ளாக்ஐக்கிய முன்னணி0.33%2
கேரள முசுலீம் லீக்காங்கிரசு0.22%2
அருணாச்சல் காங்கிரசு0.05%2
ராஷ்டிரீய ஜனதா கட்சிஜன மோர்ச்சா0.56%1
சமாஜ்வாடி ஜனதா கட்சி (ராஷ்டிரீய)ஜன மோர்ச்சா0.32%1
அரியானா முன்னேறக் கட்சிதே.ஜ. கூட்டணி0.24%1
மஜ்லீஸ்-ஈ-இத்தீஹாதுல் முஸ்லீமன்0.13%1
இந்திரா காங்கிரசு (மதச்சார்பின்மை)ஐக்கிய முன்னணி0.12%1
ஜனதா கட்சிதே.ஜ. கூட்டணி0.12%1
கேரள காங்கிரசு (மணி)காங்கிரசு0.10%1
ஐக்கிய சிறுபான்மையினர் முன்னணி, அசாம்0.10%1
இந்திய குடியானவர் மற்றும் உழைப்பாளர் கட்சி0.07%1
சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு0.05%1
மணிப்பூர் மாநில காங்கிரசு0.05%1
சிக்கிம் ஜனநாயக முன்னணி0.03%1
மொத்தம்543

கூட்டணி வாரியாக

கூட்டணி % வாக்குகள் இடங்கள்
தே. ஜ. கூட்டணி37.21%254
காங்கிரசு கூட்டணி26.14%144
ஐக்கிய முன்னணி14.61%64
ஜன மோர்ச்சா8.69%24
மற்றவர்கள்13.35%57
மொத்தம்100%543

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.