இந்தியப் பொதுத் தேர்தல், 1962

இந்தியக் குடியரசின் மூன்றாம் நாடாளுமன்றத் தேர்தல் 1962 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு மூன்றாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆட்சியிலிருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி 361 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியமைத்தது. ஜவகர்லால் நேரு நான்காம் முறையாக பிரதமரானார்.

இந்தியப் பொதுத் தேர்தல், 1962

1962

மக்களவைக்கான 494 இடங்கள்
  First party Second party
 
தலைவர் ஜவகர்லால் நேரு ஸ்ரீபத் அம்ரீத் டாங்கே
கட்சி காங்கிரசு இந்திய கம்யூனிஸ்ட்
தலைவரின் தொகுதி ஃபூல்பூர் மத்திய மும்பை நகரம்
வென்ற தொகுதிகள் 361 29
மாற்றம் -10 +2
விழுக்காடு 44.72 9.94

முந்தைய இந்தியப் பிரதமர்

ஜவகர்லால் நேரு
காங்கிரசு

இந்தியப் பிரதமர்

ஜவகர்லால் நேரு
காங்கிரசு

பின்புலம்

இத்தேர்தலில் முந்தைய தேர்தல்களில் நடப்பிலிருந்த இரட்டை உறுப்பினர் தொகுதிகள் முறை ஒழிக்கப்பட்ட ஒரு தொகுதிக்கு ஒரு உறுப்பினர் மட்டும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது. 492 தொகுதிகளில் இருந்து 492 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் தவிர 2 ஆங்கிலோ-இந்தியர்களும் மக்களவைக்கு நேரடியாக நியமனம் செய்யபட்டனர். பதினாறு ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி புரிந்து வந்த இந்திய தேசிய காங்கிரசும் ஜவகர்லால் நேருவும் மக்களிடம் நல்ல செல்வாக்கு பெற்றிருந்தனர். ஐந்தாண்டுத் திட்டங்கள் போன்ற இந்திய அரசுத் திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. மேலும் காங்கிரசுக்கு சவால் விடும் அளவுக்கு வலுவான எதிர்க்கட்சி எதுவும் இன்னும் இந்தியாவில் உருவாகவில்லை. இக்காரணங்களால் சென்ற தேர்தல்களைப் போலவே காங்கிரசு எளிதில் பெருமளவு வாக்குகளையும் இடங்களையும் வென்றது.

முடிவுகள்

மொத்தம் 55.42 % வாக்குகள் பதிவாகின

கட்சி % இடங்கள்
காங்கிரசு44.72361
இந்திய பொதுவுடமைக் கட்சி9.9429
சுதந்திராக் கட்சி7.8918
பாரதிய ஜனசங்கம்6.4414
பிரஜா சோசலிசக் கட்சி6.8112
சுயேட்சைகள்-11
இந்திய குடியரசுக் கட்சி2.8310
திமுக2.017
சோசலிசக் கட்சி2.696
கணதந்திர பரஷத்0.34
அகாலி தளம்0.723
சோட்டா நாக்பூர் சாந்தல் பர்கனாஸ் ஜனதா கட்சி0.413
ராம் ராஜ்ய பரிஷத்0.62
பார்வார்டு ப்ளாக்0.722
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்0.362
லொக் சேவக் சங்கம்0.242
புரட்சிகர சோசலிசக் கட்சி0.392
இந்து மகாசபா0.651
அனைத்து கட்சி மலையக தலைவர்கள் மாநாடு0.081
அரியானா லோக் சமிதி0.11
நூத்தன் மகா குஜராத் ஜனதா பரிஷத்0.171
மொத்தம்100492

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.