இந்தியப் பொதுத் தேர்தல், 1991

இந்தியக் குடியரசின் பத்தாம் நாடாளுமன்றத் தேர்தல் 1991 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு பத்தாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. காங்கிரசுத் தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலையில் இந்திய தேசிய காங்கிரசு வென்று பி. வி. நரசிம்ம ராவ் பிரதமரானார்.

இந்தியப் பொதுத் தேர்தல், 1991

மே 20, ஜுன் 12 மற்றும் 15, 1991 [1]

மக்களவைக்கான 543 தொகுதிகள்
  First party Second party Third party
 
தலைவர் பி. வி. நரசிம்ம ராவ் எல். கே. அத்வானி வி. பி. சிங்
கட்சி காங்கிரசு பாஜக ஜனதா தளம்
கூட்டணி காங்கிரசு பாஜக கூட்டணி தேசிய முன்னணி
தலைவரின் தொகுதி நந்தியால் காந்திநகர் ஃபதேபூர்
வென்ற தொகுதிகள் 244 120 69
விழுக்காடு 35.66 20.04 11.77

முந்தைய இந்தியப் பிரதமர்

சந்திரசேகர்
சமாஜ்வாடி ஜனதாக் கட்சி

இந்தியப் பிரதமர்

பி. வி. நரசிம்ம ராவ்
காங்கிரசு

பின்புலம்

முந்தைய தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய முன்னணி அரசு, ஒற்றுமையின்மையால் இரு ஆண்டுகளில் கவிழ்ந்தது. அதன் முக்கிய அங்கமான ஜனதா தளம் இரண்டாகப் பிளவுற்று சந்திரசேகர் தலைமையில் சவாஜ்வாடி ஜனதாக் கட்சி உருவானது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுடுப்பில் வி. பி. சிங் தோற்று சந்திரசேகர் பிரதமரானார். சந்திரசேகர் அரசுக்கு ராஜீவ் காந்தியின் காங்கிரசு கட்சி வெளியிலிருந்து ஆதரவளித்தது. ஆனால் விரைவில் ஆதரவை விலக்கிக் கொண்டதால், சந்திர சேகர் அரசும் கவிழ்ந்து, புதிதாக தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இத்தேர்தலில் நான்கு முனைப்போட்டி காணப்பட்டது - காங்கிரசு, பாரதீய ஜனதா கட்சி, ஜனதா தளம், சமாஜ்வாடி ஜனதாக் கட்சி ஆகியவை தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் களத்தில் இருந்தன.

தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் பி. வி. நரசிம்ம ராவ் காங்கிரசு தலைவரானார். ராஜீவ் படுகொலையினால் எழுந்த அனுதாப அலையால் காங்கிரசு நிறைய இடங்களில் வென்று முதலிடத்தில் வந்தது. தனிப்பெரும்பான்மை கிட்டவில்லையென்றாலும் தனிப்பெரும் கட்சி என்பதால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது. நரசிம்ம ராவ் பிரதமரானார்.

முடிவுகள்

மொத்தம் 55.71 % வாக்குகள் பதிவாகின

கட்சி % இடங்கள்
காங்கிரசு35.66244
பாஜக20.04120
ஜனதா தளம்11.7759
சிபிஎம்6.1435
சிபிஐ2.4814
தெலுங்கு தேசம்2.9613
அதிமுக1.6111
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா0.536
ஜனதா கட்சி3.345
புரட்சிகர சோசலிசக் கட்சி0.635
சிவ சேனா0.794
ஃபார்வார்டு ப்ளாக்0.413
பகுஜன் சமாஜ் கட்சி1.83
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்0.32
இந்திய காங்கிரசு (சோசலிசம்)0.351
அசாம் கன பரிசத்0.541
கேரளா காங்கிரசு (மணி)0.141
மணிப்பூர் மக்கள் கட்சி0.061
நாகாலாந்து மக்கள் குழு0.121
சிக்கிம் சங்கராம் பரிசத்0.041
அசாம் சிறுபான்மையினர் முன்னணி0.071
மஜ்லீஸ்-ஈ-இத்தீஹாதுல் முஸ்லீமன்0.161
சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு0.51
அரியானா முன்னேறக் கட்சி0.121
ஜனதா தளம் (குஜராத்)0.51
சுயெட்சைகள்4.011

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.