இந்தியப் பொதுத் தேர்தல், 1984

இந்தியக் குடியரசின் எட்டாம் நாடாளுமன்றத் தேர்தல் 1984 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு எட்டாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. இந்திரா காந்தியின் படுகொலையால் கிட்டிய அனுதாப அலையால். இந்திய தேசிய காங்கிரசு எளிதில் வென்று ராஜீவ் காந்தி இரண்டாம் முறையாக பிரதமரானார்.

இந்தியப் பொதுத் தேர்தல், 1984

டிசம்பர் 24, 27 மற்றும் 28, 1984 [1]

மக்களவைக்கான 514 தொகுதிகள்
  First party Second party
 
தலைவர் ராஜீவ் காந்தி என். டி. ராமராவ்
கட்சி காங்கிரசு தெதேக
கூட்டணி காங்கிரசு
தலைவரின் தொகுதி அமேதி போட்டியிடவில்லை
வென்ற தொகுதிகள் 416 30
விழுக்காடு 50.70 4.31%

முந்தைய இந்தியப் பிரதமர்

ராஜீவ் காந்தி
காங்கிரசு

இந்தியப் பிரதமர்

ராஜீவ் காந்தி
காங்கிரசு

பின்புலம்

இத்தேர்தலின் போது இந்திய மக்களவையில் 533 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் நேரடியாக நியமிக்கப்பட்ட இரு ஆங்கிலோ-இந்தியர்களும் இருந்தனர். ஆனால் இத்தேர்தல் 514 தொகுதிகளுக்கு மட்டுமே நடத்தப்பட்டது. பஞ்சாப் மற்றும் அசாம் மாநிலங்களில் அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய பிரிவினைப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்ததால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை. சில மாதங்கள் கழித்து 1985ம் ஆண்டு நடைபெற்றது. முந்தைய தேர்தலில் வென்று பிரதமரான இந்திரா காந்தி 1984 அக்டோபரில் தனது பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவருக்குப் பின் அவரது இளைய மகன் ராஜீவ் காந்தி இந்திய தேசிய காங்கிரசின் தலைவாகவும், பிரதமராகவும் தேர்ந்தெடுக்கபட்டார். பிரதமரான சில நாட்களில் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தலை சந்தித்தார். இந்திரா காந்தியின் படுகொலையால் ஏற்பட்ட நாடளாவிய அனுதாப அலையால் காங்கிரசு பெருவெற்றி கண்டது. இத்தேர்தலில் வலுவான எதிர்க்கட்சிகளோ கூட்டணிகளோ எதுவும் இல்லை. காங்கிரசுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் ஆந்திரப் பிரதேச மாநிலக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி வந்தது. சில மாதங்கள் கழித்து அசாமிலும் பஞ்சாபிலும் நடைபெற்ற தேர்தல்களிலும் காங்கிரசு பெருவாரியான இடங்களை வென்றது.

முடிவுகள்

மொத்தம் 63.56 % வாக்குகள் பதிவாகின

கட்சி % இடங்கள்
காங்கிரசு49.01%404
சிபிஎம்5.87%22
தெலுங்கு தேசம்4.31%30
அதிமுக1.69%12
ஜனதா கட்சி6.89%10
சிபிஐ2.71%6
இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்)1.52%4
லோக் தளம்5.97%3
புரட்சிகர சோசலிச கட்சி0.50%3
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி0.43%3
பாஜக7.74%2
திமுக2.42%2
பார்வார்டு ப்ளாக்0.45%2
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்0.28%2
கேரள காங்கிரசு (ஜோசப்)0.25%2
இந்திய காங்கிரசு (ஜெ)0.64%1
இந்தியக் குடியானவர் மற்றும் தொழிலாளர் கட்சி0.20%1
  • குறிப்பு: அதிமுக காங்கிரசு கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.