இந்தியப் பொதுத் தேர்தல், 1989

இந்தியக் குடியரசின் ஒன்பதாம் நாடாளுமன்றத் தேர்தல் 1989 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு ஒன்பதாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரசு தொற்று, எதிர்க்கட்சிக் கூட்டணியான தேசிய முன்னணி வெற்றி பெற்றது. ஜனதா தளத்தின் வி. பி. சிங் பிரதமரானார்

இந்தியப் பொதுத் தேர்தல், 1989

நவம்பர் 22 மற்றும் 26, 1989 [1]

மக்களவைக்கான 543 தொகுதிகள்
  First party Second party
 
தலைவர் என். டி. ராமராவ் ராஜீவ் காந்தி
கட்சி தெதேக காங்கிரசு
கூட்டணி தேசிய முன்னணி காங்கிரசு
தலைவரின் தொகுதி போட்டியிடவில்லை அமேதி
வென்ற தொகுதிகள் 275 197
விழுக்காடு 40.66% 39.53%

முந்தைய இந்தியப் பிரதமர்

ராஜீவ் காந்தி
காங்கிரசு

இந்தியப் பிரதமர்

வி. பி. சிங்
தேசிய முன்னணி

பின்புலம்

இத்தேர்தலின் போது இந்திய மக்களவையில் 533 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் நேரடியாக நியமிக்கப்பட்ட இரு ஆங்கிலோ-இந்தியர்களும் இருந்தனர். முந்தைய தேர்தலில் எளிதாக வென்ற ராஜீவ் காந்தி தனது ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் மக்களின் கடும் அதிருப்தியை சம்பாத்திருந்தார். பஞ்சாப்பில் தொடர்ந்து நடந்துவந்த பிரிவினைப் போராட்டம், அயோத்தி சிக்கல், போபர்ஸ் ஊழல் போன்ற பிரச்சனைகளால் காங்கிரசின் செல்வாக்கு சரிந்திருந்தது. போபர்ஸ் தொடர்பாக ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரது அமைச்சரவையில் இருந்து பதவி விலகிய வி. பி. சிங் புதிதாக ஜன மோர்ச்சா என்றொரு கட்சியை உருவாக்கினார். பின் அது முன்னாள் ஜனதா கட்சியின் வழித்தோன்றல் கட்சிகளுடன் இணைந்து ஜனதா தளம் என்றொரு வலுவான கட்சியாக உருவெடுத்தது. இக்கட்சி காங்கிரசுக்கு எதிரான பாரதீய ஜனதா கட்சி, தெலுங்கு தேசம், அகாலி தளம், திமுக, அசாம் கன பரிசத் ஆகிய கட்சிகளை ஓரணியில் திரட்டி தேசிய முன்னணி என்றொரு கூட்டணியை உருவாக்கியது. இக்கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று வி. பி. சிங் இந்தியப் பிரதமரானார்.

முடிவுகள்

மொத்தம் 61.95 % வாக்குகள் பதிவாகின

கட்சி % இடங்கள்
காங்கிரசு39.53197
ஜனதா தளம்17.79143
பாஜக11.3685
சிபிஎம்6.5533
சிபிஐ2.5712
சுயேட்சைகள்5.2512
அதிமுக1.511
அகாலி தளம் (மான்)0.776
புரட்சிகர சோசலிசக் கட்சி0.624
ஃபார்வார்டு ப்ளாக்0.423
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி0.23
பகுஜன் சமாஜ் கட்சி2.073
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா0.343
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்0.322
தெலுங்கு தேசம்3.292
இந்திய காங்கிரசு (சோசலிசம்)0.331
மகாராஷ்டிரவாடி கோமாண்டக் கட்சி0.041
சிக்கிம் சங்க்ராம் பரிஷத்0.031
இந்து மகாசபா0.071
மஜ்லீஸ்-ஈ-இத்தீஹாதுல் முஸ்லீமன்0.211
கோர்க்கா தேசிய விடுதலை முன்னணி0.141
இந்திய மக்கள் முன்னணி0.251
கேரளா காங்கிரசு (மணி)0.121
மார்க்சிய ஒருகிணைப்புக் குழு0.081
சிவ சேனா0.111
மொத்தம்-543

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.