போபர்ஸ் ஊழல்

போபர்ஸ் அவதூறு (Bofors Scandal) இந்தியாவில் 1980 இல் நிகழ்ந்த மிக முக்கிய பீரங்கி பேர ஊழல் குற்றச்சாட்டு நிகழ்வாகும். இந்தியாவிற்காக போபர்சு நிறுவனத்திடம் இருந்து வாங்கிய 155 மிமீ பீரங்கிகள் (குட்டையான பீரங்கி வண்டி - howtzer) வாங்கியதில் தனிப்பட்ட இலாபம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவராக முன்னாள் பிரதமர் இராஜிவ் காந்தி மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதன் காரணமாக அவரும் அவருடைய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் 1989 தேர்தலில் தோல்வியைக் கண்டது.

இந்த அவதூறு குற்றச்சாட்டின் இந்திய மதிப்பு 64 கோடி இந்திய ரூபாய்களாகும்.

இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர் அப்பொழுது இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த வி. பி. சிங். இது பத்திரிகைகளில் சித்ரா சுப்பிரமணியம் மற்றும் என். ராம் போன்ற பத்திரிகையாளர்களால் இந்து மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களின் மூலம் வெளியானது.

இந்த ஊழலுக்கு இடைத்தரகராக செயல்பட்டவர் இத்தாலியத் தொழிலதிபரான ஒத்தோவியோ குவாத்ரோச்சி. இவர் இராஜிவ் காந்திக்கு மிக நெருக்கமானவர்.

இதன் வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கையில் இராஜிவ் காந்தி மே 21, 1991 அன்று படுகொலை செய்யப்பட்டார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.