தெலுங்கானா இராட்டிர சமிதி
"தெலுங்கானா இராட்டிர சமிதி" (Telangana Rashtra Samithi, TRS) ஆந்திர மாநிலத்திலிருந்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைவதற்காக அமைக்கப்பட்ட ஒரு மாநில கட்சி ஆகும். இக்கட்சியை தொடங்கியவர் திரு. கே. சந்திரசேகர ராவ் ஆவார்.
தெலுங்கானா இராட்டிர சமிதி | |
---|---|
![]() | |
தலைவர் | கே. சந்திரசேகர் ராவ் (கேசியார்) |
தொடக்கம் | ஏப்ரல் 27, 2001 |
தலைமையகம் | பஞ்சாரா ஹில்ஸ், ஐதராபாத்து, தெலுங்கானா, இந்தியா |
செய்தி ஏடு | நமஸ்தே தெலுங்கானா |
கொள்கை | தெலுங்கானா மாநில அரசியல் பழைமைவாதம் |
அரசியல் நிலைப்பாடு | நடுவண்-வலது |
கூட்டணி | ஐமுகூ(2004–2006) |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 11 / 545 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 1 / 250 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., | 63 / 119 |
இணையதளம் | |
www.trspartyonline.org |
அமைப்பின் தோற்ற வரலாறு
தெலுங்கானா இராட்டிர சமிதியின் தலைவர், திரு. கே. சந்திரசேகர ராவ் , கட்சியை தொடங்குவதற்கு முன்பு தெலுங்கு தேசக்கட்சியில் இருந்தார். 2001-ஆம் ஆண்டு அவர் இக்கட்சியை தொடங்கும்போது, ஆந்திர சட்டப்பேரவையில் துணை சபாநாயகராக பதவி வகித்தார். கட்சியை தொடங்கும் போது தனது பதவியை மட்டுமல்லாது ஆந்திர சட்டமன்றத்திலிருந்தும் விலகினார்.
தேர்தல்களில் முடிவுகள்
தெலுங்கானா இராட்டிர சமிதி தனித் தெலுங்கானா மாநிலம் கோரி போராடியது மட்டுமல்லாது தேர்தல்களிலும் பங்கேற்றது. முதன்முதலாக 2004ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பங்கேற்றது. தொடர்ச்சியான தேர்தல்களில் இக்கட்சிக்கு கிடைத்த இடங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
ஆண்டு | தேர்தல் | வென்றவை | போட்டியிட்டவை | வைப்புத்தொகை இழந்தவை |
---|---|---|---|---|
2004 | சட்டப்பேரவை | 26 | 54 | 17[1] |
2004 | மக்களவை | 5 | 22[2] | 17 |
2008 | சட்டப்பேரவை (Bye) | 7 | 16 | 2[3] |
2008 | மக்களவை (Bye) | 2 | 4 | 0 |
2009 | சட்டப்பேரவை | 10 | 45 | 13[4] |
2009 | மக்களவை | 2 | 9 | 1 [5] |
2010 | சட்டப்பேரவை (Bye) | 11 | 11 | 0 |
2011 | சட்டப்பேரவை (Bye) | 1 | 1 | 0 |
2012 | சட்டப்பேரவை (Bye) | 4 | 5 | 0 |
2012 | சட்டப்பேரவை (Bye) | 1 | 1 | 0 |
2014 | சட்டப்பேரவை | 63 | 119 | 0[4] |
2014 | மக்களவை | 11 | 17 | 0 [5] |
வெளி இணைப்புகள்
மேற்சான்றுகள்
- http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2004/StatisticalReports_AP_2004.pdf
- http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_2004/Vol_I_LS_2004.pdf
- Front Page : TRS receives a setback in by-polls. The Hindu (2008-06-02). Retrieved on 2013-07-28.
- http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2009/Statistical_Report_AP2009.pdf
- http://eci.nic.in/eci_main/archiveofge2009/Stats/VOLI/13_PerformanceOfStateParty.pdf