ஆரணியில் போக்குவரத்து
ஆரணியில் சாலை மூலம் பேருந்து போக்குவரத்து, ரயில் நிலையங்கள் மூலமும் இந்த நகரை இணைக்கிறது [].
சாலை வசதிகள்
பல்வேறு நன்கு அமைக்கப்பட்ட சாலைகள் மூலம் ஆரணி நகரம் இணைக்கப்பட்டுள்ளது.
- மாநில நெடுஞ்சாலைகள்-4 ஆற்காடு – ஆரணி – சேத்துப்பட்டு - செஞ்சி– விழுப்புரம் சாலை
- மாநில நெடுஞ்சாலை - 505 & 770 & 116 & 58 & 120 தாம்பரம் - காஞ்சிபுரம் - செய்யாறு - ஆரணி சாலை
- மாவட்ட சாலை - 40 ஆரணி - தேவிகாபுரம் - அவலூர்பேட்டை சாலை
- மாவட்ட சாலை - ஆரணி - வாழைப்பந்தல் - செய்யாறு சாலை
- மாநில நெடுஞ்சாலை - 43 & 5 & 32 ஆரணி - வந்தவாசி - திண்டிவனம் - புதுச்சேரி சாலை
- மாநில நெடுஞ்சாலை - 41 & 38 & 6A & 18 ஆரணி - திருவண்ணாமலை - சேலம் மற்றும் திருச்சி சாலை
- மாநில நெடுஞ்சாலை - NH133 ஆரணி - எட்டிவாடி - போளூர் - புதுப்பாளையம் - செங்கம் சாலை
ஆகிய முக்கிய சாலைகள் ஆரணியை இணைக்கின்றன.ஆரணிக்கு வெளியே ஆரணியை இணைக்க சென்னை (ஆற்காடு) சாலை, சென்னை சாலை மற்றும் கடலூர் சாலை ஒரு பைபாஸ் சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன.
பேருந்து வசதிகள்
நிர்வாக வசதிக்காக ஆரணியில் இரண்டு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை:
புதிய பேருந்து நிலையம் (அ) ஆரணி கோட்டை பேருந்து நிலையம்
- திருவண்ணாமலை, போளூர், களம்பூர், வந்தவாசி, பெரணமல்லூர் , கலசப்பாக்கம், சேத்துப்பட்டு, விழுப்புரம், செஞ்சி, ஆகிய ஊர்களுக்கு அதிகப்படியான சேவைகள் உள்ளது.
- செங்கம், ஜமுனாமரத்தூர், சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, தேவிகாபுரம் , படவேடு, தெள்ளாறு, திண்டிவனம், புதுச்சேரி , வாழைப்பந்தல்ஆகிய ஊர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பேருந்து சேவைகள் உள்ளது.
- புதுக்கோட்டை, நாகர்கோவில், வேதாரண்யம், ஒகேனக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, மேல்மருவத்தூர், மேல்மலையனூர், அவலூர்பேட்டை, உத்திரமேரூர், கடலூர், பெங்களூர், தஞ்சாவூர், ஆகிய ஊர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து சேவைகள் உள்ளது.
- துரிஞ்சிகுப்பம், சித்தேரி (துரிஞ்சிகுப்பம்) ஆத்துவாம்பாடி, பொத்தரை, விளாங்குப்பம், திருமணி, புலவன்பாடி , மண்டகொளத்தூர், பாலவாக்கம், முனுகப்பட்டு, ஆவணியாபுரம், கேசவபுரம் (படவேடு), பெரிய கொழப்பலூர், அடையபுலம், வினாயகபுரம் ஆகிய கிராமப் புற ஊர்களுக்கு நகரப் பேருந்துகள் மூலம் சேவைகள் உள்ளது.
பழைய பேருந்து நிலையம் (அ) புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்
- தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு (தடம் எண் - 202) 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. இவற்றில் (தடம் எண் - 202UD) UD(ULTRA DELUXE SERVICE) எனப்படும் சொகுசு பேருந்துகள், குளிர்ச்சாதன பேருந்துகள்(Volvo AC Bus Service), விரைவு பேருந்து சேவைகளும்(Express Service) மற்றும் இடைநில்லா பேருந்து(Fast to Fast Service) எனப்படும் அதிவிரைவு பேருந்து சேவைகளும் இயக்கப்படுகிறது.
- அதுமட்டுமில்லாமல் சென்னையின் வளர்ச்சிப்பெற்ற உள் நகரான தியாகராயநகர், அடையாறு, தாம்பரம், பூவிருந்தவல்லி ஆகிய இடங்களுக்கும் பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது.
- வேலூர், ஆற்காடு, காஞ்சிபுரம், செய்யாறு, இராணிப்பேட்டை, வாலாஜா, கண்ணமங்கலம் ஆகிய நகரங்களுக்கு 5 லிருந்து 10 நிமிடத்திற்கு ஒரு பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது.
- வெம்பாக்கம், திருத்தணி, திருப்பதி, பெங்களூரு, கிருஷ்ணகிரி, ஓசூர், திருப்பத்தூர், கலவை, குடியாத்தம், ஆகிய ஊர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது.
- அரக்கோணம், திருவள்ளூர், காளஹஸ்தி, சித்தூர் ஆகிய ஊர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது.
- ஆதனூர், முள்ளண்டிரம், குன்னத்தூர், பொன்னம்பலம், வாழைப்பந்தல், லாடவரம், விளாப்பாக்கம், பூசிமலைக்குப்பம், நஞ்சுகொண்டாபுரம், அமிர்தி, ரெட்டிப்பாளையம், காளசமுத்திரம், வாழியூர், சிறுமூர், அய்யம்பாளையம், திமிரி, ஒண்ணுபுரம், மட்டதாரி ஆகிய கிராமப்புற ஊர்களுக்கு நகரப் பேருந்துகள் மூலம் பேருந்து சேவைகள் உள்ளது.
ஆரணி நகரிலிருந்து பிற பகுதிகளிலும், அதற்கு அப்பாலும் செல்வதற்க்கு பல பேருந்துகள் இயக்கப்படுகிறது. அவற்றில் சில:
ரயில் போக்குவரத்து வசதிகள்
இதனையும் காண்க - ஆரணி ரயில் நிலையம்
ஆரணி வழியாக ரயில்கள் இணைக்க நகரியில் இருந்து திண்டிவனம் பாதை மத்திய அரசு மூலம் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. அத்துடன், ஆரணி சைதாபேட்டையில் அமைய வேண்டிய நிலையம் தனியார் பேருந்து நல முதலாளிகள் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றுள்ளதால் ரயில் நிலையம் ஆரணி - திருவண்ணாமலை சாலையிலுள்ள களம்பூருக்கு எனுமிடத்திற்கு மாற்றப்பட்டது.ஆரணிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் ஆரணி ரயில் நிலையம் ஆகும். இது 10 கி.மீ தொலைவில் ஆரணி - திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ளது. ஆயினும் வணிகப் புகழ் பெற்ற ஆரணி நகரத்திற்கு 10 கிமீ தொலைவில் உள்ள ரயில் நிலையம் இதுவாகும். ஆரணி வர விரும்பும் புதிய மக்கள் இந்த இரயில் நிலையமானது ஆரணிக்குச் சுலபமாக செல்ல வழி வகுக்கும். திருவண்ணாமலை நகரம் மற்றும் ஆரணி சந்திப்பு இரயில் நிலையங்களுக்கு அப்பால் , மாவட்டத்தின் மூன்றாவது பெரிய ரயில் நிலையம் ஆகும். மக்கள் பயன்பாட்டிற்கு 1889 ஆம் வருடம் திறக்கப்பட்டது. இங்கிருந்து பெங்களூரு, எஸ்வந்த்பூர், வேலூர், கொல்கத்தா ஹௌரா, திருப்பதி, கடலூர்,பாண்டிச்சேரி,மன்னார்குடி, மாயவரம், கும்பகோணம், திருச்சி, திண்டுக்கல், மதுரை ஆகிய ஊர்களும் ரயில் சேவை உள்ளது.
வண்டியின் பெயர் | வண்டி எண் | புறப்படும் இடம் | சேருமிடம் |
---|---|---|---|
திருப்பதி விழுப்புரம் பயணிகள் வண்டி | 56885 | திருப்பதி | விழுப்புரம் |
விழுப்புரம்- காரக்பூர் விரைவு வண்டி | 22603 | விழுப்புரம் | திருப்பதி |
விழுப்புரம் காட்பாடி பயணிகள் வண்டி | 56886 | விழுப்புரம் | காட்பாடி |
காட்பாடி விழுப்புரம் பயணிகள் வண்டி | 56881 | காட்பாடி | விழுப்புரம் |
விழுப்புரம்-திருப்பதி | 56882 | விழுப்புரம் | திருப்பதி |
காட்பாடி-விழுப்புரம் | 56883 | காட்பாடி | விழுப்புரம் |
காட்பாடி-விழுப்புரம் | 56884 | காட்பாடி | விழுப்புரம் |
புருலியா SF விரைவு வண்டி | 22606 | விழுப்புரம் | புருலியா |
பாமணி SF விரைவு வண்டி | 17407 | திருப்பதி | மன்னார்குடி |
காரக்பூர் விரைவு வண்டி | 22604 | புதுச்சேரி | காரக்பூர் |
சாலுக்யா விரைவு வண்டி | 11005 | மும்பை தாதர் சென்ட்ரல் | புதுச்சேரி |
புதுச்சேரி-திருப்பதி வாரந்திர விரைவு வண்டி | 17414 | புதுச்சேரி | திருப்பதி |
ஆரணி-கடலூர் பயணிகள் வண்டி | 12694 | ஆரணி | கடலூர் |
சாலுக்யா விரைவு வண்டி | 11006 | புதுச்சேரி | பெங்களூரு |
விமானப் போக்குவரத்து
ஆரணியில் விமான நிலையங்கள் ஏதுமில்லை. இருந்தாலும் அருகிலுள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் மூலம் பயணம் செய்யலாம். அருகிலுள்ள விமான நிலையங்களான சென்னை பன்னாட்டு விமான நிலையம் 123 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பெங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம் 234 கிமீ தொலைவிலும் உள்ளது.