வல்லாரை
வல்லாரை (Centella asiatica) (Asiatic pennywort, Indian pennywort) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய கீரை வகைத்தாவரமாகும். ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளுக்கு உரியதாகும்.
வல்லாரை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்குந்தாவரம் |
தரப்படுத்தப்படாத: | மெய்யிருவித்திலையி |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Apiales |
குடும்பம்: | Mackinlayaceae |
பேரினம்: | Centella |
இனம்: | C. asiatica |
இருசொற் பெயரீடு | |
Centella asiatica (லி.) உர்பான் | |
வேறு பெயர்கள் | |
Hydrocotyle asiatica லி. |
வல்லாரை சாறு
வாழிடம்
இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம். இதன் இலைப்பகுதிகள் உணவாகப் பயன் படுவதால் இத்தாவரம், கீரையினங்களுள் அடங்கும்.
வல்லமை மிக்க கீரை,
வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது.
சத்துக்கள்
இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.
உண்ணும் முறை
இக்கீரையை, தினமும் சமைத்து உண்ணலாம். இதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்க, சித்த மருத்துவம் கீழ்கண்டவற்றை உரைக்கிறது.
- இதனை உண்ணும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரை, பாகற்காய் ஆகியவற்றினை உண்ணக்கூடாது.
- புளி மற்றும் காரத்தினை மிகக் குறைவாகவே உண்ண வேண்டும்.
- சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.
- இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.
- இந்த கீரையை கழுவி பச்சையாக உண்ணுதல் மிகவும் நல்லது. பள்ளி சிருவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம். நன்கு சுவையாக இருக்கும்.
வெளியிணைப்புகள்
மேற்கோள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.