முடக்கொத்தான்

முடக்கொத்தான் அல்லது கொற்றான், முடர்குற்றான், முடக்கற்றான், முடக்கொற்றான், முடக்குத் தீர்த்தான், உழிஞை, முடக்கறுத்தான் (Cardiospermum halicacabum) என்பது ஒரு மருத்துவ மூலிகைக் கொடியாகும். உடலில் ஏற்படும் முடக்குகளை வேரறுக்கும் தன்மை இருப்பதால், முடக்கறுத்தான் (முடக்கு+அறுத்தான்) எனப் பெயர் பெற்றது. இது வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில்[1] ஏராளமாக காணப்படும் உயரப் படரும் ஏறுகொடி ஆகும். இதன் பிளவுபட்ட இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிற இதழ்கள் கொண்டவை. இதன் காய்கள் பலூன் போன்ற அமைப்பை உடையவை, அவற்றை கைகளுக்கு இடையில் வைத்துத் தட்டும்போது பட்டாசு வெடிப்பதைப் போன்ற ஒலி உண்டாக்கும். இதன் காரணமாக சிறுவர்கள் இதன் காய்களை, ‘பட்டாசுக் காய்’ என்றும் ‘டப்பாசுக் காய்’ என்றும் அழைப்பதுண்டு. இக்கொடியின் வேர், இலை, விதை ஆகியன மருத்துவப் பயன்பாடுடையவை. இவை  பெரும்பாலும் சாலையோரங்களிலும், ஆறொரங்களிலும் பரவலாக களைபோல வளர்ந்து இருப்பதைக் கணலாம். அது ஆன்டிடிராரிஹோலை [2] மற்றும் ஹோமியோபதி மருத்துவம்[1] ஆகியவற்றில் ஆய்வு செய்கின்றனர். தமிழ்நாட்டில் இதன் இலைகளை அரைத்து தோசை மாவுடன் கலந்து முடக்கத்தான் தோசை என்ற பெயரில் செய்வார்கள்.

முடக்கொத்தான்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத: மெய்யிருவித்திலையி
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: சாபின்டேல்ஸ்
குடும்பம்: சாபின்டேஸி
துணைக்குடும்பம்: சாபின்டாய்டியே
பேரினம்: கார்டியோஸ்பெர்மம்
இனம்: ஹெலிகாகபம்
இருசொற் பெயரீடு
கார்டியோஸ்பெர்மம் ஹெலிகாகபம் "
லி.

பழங்காலத் தமிழகத்தில் போரின்போது அரண்களை முற்றுகையிடும்போது, அதன் அறிகுறியாக இதன் மலர்களை வீரர்கள் சூடிக்கொள்வார்களாம். உழிஞையின் பெயரில் உழிஞைத் திணை என்ற திணை அமைந்துள்ளது.[3]

மருத்துவக் குணங்கள்

படங்கள்

மேற்கோள்கள்

  1. Committee for veterinary medicinal products (2000). "Summary Report on "Cardiospermum halicacabum"". EMEA/MRL/664/99-FINAL (August 1999). The European Agency for the Evaluation of Medicinal Products (Veterinary Medicines Evaluation Unit). பார்த்த நாள் 2010-04-25. .
  2. Rao, N Venkat; Chandra Prakash, K; Shanta Kumar, SM (2006), "Pharmacological investigation of Cardiospermum halicacabum (Linn) in different animal models of diarrhoea", Indian Journal of Pharmacology 38 (5): 346–349, doi:10.4103/0253-7613.27703, http://www.ijp-online.com/text.asp?2006/38/5/346/27703, பார்த்த நாள்: 2010-04-25
  3. டாக்டர் வி. விக்ரம் குமார் (2018 சூலை 7). "நோய்களை மூக்கறுக்கும் முடக்கறுத்தான்". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 8 சூலை 2018.

`

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.