அரைக்கீரை

அரைக்கீரை (ஒலிப்பு ) அல்லது குப்பை கீரை என்பது தமிழர் சமையலில் இடம்பெறும் கீரைகளில் ஒன்றாகும். சித்த மருத்துவத்தில் காய்ச்சல், குளிர் சன்னி, கப நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக இக்கீரை கூறப்பட்டுள்ளது. தோசை, கூட்டு, சூப், கூட்டல், வடை, மசியல் என பல வகைகளில் அரைக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது கீரையாகத் தெற்காசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் .[1] ஆப்பிரிக்காவிலும் போற்றி உண்ணப்படுகிறது.[2] அரைக்கீரை உடலுக்கு வெப்பத்தை கொடுப்பதினால் மகப்பேறு பெற்ற பெண்களுக்கு ஒரு முக்கிய உணவாக அளிக்கபடுகிறது. அதோடு பிரசவத்தால் எற்படும் உடல் மெலிவை போக்கி, உடலுக்குச் சக்தியையும், பலத்தையும் கொடுக்கின்றது.[3]

மேற்கோள்கள்

  1. Edible Amaranth
  2. Grubben, G.J.H. & Denton, O.A. (2004) Plant Resources of Tropical Africa 2. Vegetables. PROTA Foundation, Wageningen; Backhuys, Leiden; CTA, Wageningen.
  3. Arai Keerai Benefits in Tamil


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.