தண்டுக்கீரை

தண்டுக்கீரை கீரைக் குடும்பத்தைச் சேர்ந்தது. மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கீரைகளில் இதுவும் ஒன்று. தண்டுக்கீரையின் இலைகள், தண்டு ஆகிய அனைத்துப் பகுதிகளையும் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. செழிப்பான பகுதிகளில் ஓர் ஆள் உயரம் வரை வளரக் கூடியது. தண்டுக்கீரை ஆறு மாதங்கள் வரை வளரக் கூடியது. ஆனால், 100 முதல் 120 நாட்களுக்குள் இந்தக் கீரையை அறுவடை செய்து சமைக்கும் போதுதான் தண்டுகள் நார் இல்லாமல் இளசாகவும், உண்ணுவதற்குச் சுவையாகவும் இருக்கும். முதிர்ந்த கீரையில் மிக அதிக அளவிலான எாிபொருள் கிடைக்கிறது. தண்டுக்கீரையைப் பருப்பு வகைகளோடு அவியல், மசியல், பொறியல் போன்ற பல விதங்களாக தயார் செய்தும் உண்ணலாம். தண்டுகளைச் சாம்பார் வைத்தும் சாப்பிடலாம். வடையில் தண்டுக்கீரை நறுக்கிப் போட்டால் வடை சுவையாக இருக்கும்.

தண்டுக்கீரையில் வைட்டமின் ஏ மற்றும் சி, பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு ஆகிய தாதுப்பொருல்கள் அதிக அளவில் இருக்கின்றன. இதில் தாமிரச்சத்து, மணிச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தயமின், ரிபோஃப்ளேவின், நிகோடினிக் அமிலம், ஆக்சாலிக் அமிலம், புரதம், தாது உப்புக்கள், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், கந்தகம், குளோாின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.

இது இரத்தக் கொதிப்பு, நரம்புத் தளர்ச்சி, வயிற்று ரணம், உள் அழல், மூத்திர கிருச்சிர நோய்களைக் குணப்படுத்த வல்லது. கல்லீரல், நீர்த் தாரையில் அடைபட்ட கற்களை எாித்து விடும் தன்மையுள்ளது. சொிமான சக்தி, கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது. மூளை வளர்ச்சியையும், ஞாபக சக்தியையும் உண்டு பண்ணக் கூடியது. முதுகெழும்பை பலப்படுத்துகிறது. பசியைத் துாண்டக் கூடியது. எலும்பு மஜ்ஜை ( உள் மூளை ) வளர்க்கிறது. இரத்தத்தை சுத்திகாிக்கக் கூடியது. மலச்சிக்கலுக்கும் சிறந்தது.

குடல் புண்களை ஆற்றும், கட்டிகளைக் கரைக்கும், இருதய பலவீனத்தைப் போக்கும். இரத்ததில் உள்ள கொழுப்பைக் கரைக்கும், மூச்சுக் குழல், குடல் போன்றவற்றி்ல் ஏற்படும் தடைகளை நீக்கவும், பித்தத்ைத நீக்கும் சக்தி படைத்தது. மனிதனின் ஆக்ரோஷ குணத்தைப் படிப்படியாகக் குறைக்கவல்லது. குடல் புண் உள்ளவர்கள் இந்தக் கீரையை மசியலாகவோ அல்லது லேசாக வதக்கியோ உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. அாிசி கழுவிய நீாில் இதன் தண்டைச் சேர்த்து புளி விட்டு மண்டியாகச் செய்து சாப்பிட்டால் ருசி அதிகமாகும். இது உடல் பலத்தையும், அழகையும், ஒளியையும் கொடுக்கும், மூல நோயைக்கு மிகவும் சிறந்தது.

தண்டுக்கீரையில் இரண்டு வகைகள் உள்ளன. தண்டு வெண்ணிறமாக உள்ள கீரையை வெங்கீரைத்தண்டு என்றும், செந்நிறகீரைத்தண்டு என்றும், செந்நிறமாக உள்ள கீரையை செங்கீரைத் தண்டு என்றும் அழைக்கப்படுகின்றது. செங்கீரைத்தண்டு, வெங்கீரைத்தண்டு ஆகிய இரண்டு வெவ்வேறு மருத்துவப் பண்புகளைக் கொண்டிருப்பதாக மருத்துவ நுால்கள் கூறுகின்றன. செங்கீரைத்தண்டு தீராத பித்த நோயைத் தீர்க்கிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகம் உள்ளவர்கள் வாரத்திற்கு 3 அல்லது 4 நாட்கள் கண்டுக்கீரையை உணவுடன் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். பெண்களின் பெரும்பாட்டையும், உடல் வெப்பத்தையும் குணப்படுத்துகிறது. மேலும் மாதவிடாய் வலி சற்று குறையும். கருப்பை கோளாறுகளுக்கும் இந்த வகைக் கீரை நல்லது. வெங்கீரைத்தண்டு சிறுநீர் பிரச்சிைனகளைத் தீர்க்கிறது. பித்தத்தை அகற்றுகிறது. உடல் வெப்பத்தைத் அதோடு, மேகம், வயிற்றுக்கடுப்பு, மூலம், இரத்த பேதி ஆகியவற்றையும் வெங்கீரைத்தண்டு குணப்படுத்துகிறது. கொழுப்பைக்கரைக்கவும், தேைவயற்ற சதையைக் குறைக்கவும், அதிக உடல் நீரை வெளியேற்றவும் தண்டுக்கீரை பயன்படுகிறது. உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் தண்டுக்கீரையை அதிக அளவு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

உணவிலுள்ள எல்லாவித சத்தையும் இது தரக்கூடியது. ஆகையால் இதை முழுச்சத்துணவாகக் கொள்ளலாம். இந்த ஒரே மூலிகைக்குள் எல்லாவித மருத்துவக் குணங்களும் அடங்கியிருப்பதால் இதை மருத்துவச் சிறப்பு மிக்க மூலிகையாகச் சித்த வைத்தியர்கள் கருதிப் பயன்படுத்தி வருகிறார்கள். சீரான உடல் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத கீரையாகும்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.