கொவ்வை
கோவை அல்லது கொவ்வை (ivy gourd, Coccinia grandis) மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. இதன் இலையின் பிளவு அமைப்பைக் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை என்ற பிரிவுகள் உண்டு. இதன் பூ வெள்ளை நிறமானதாகும். இலை, காய், தண்டு, வேர் என எல்லாப் பாகங்களும் மருத்துவ குணமுடையனவாகும். இலைக்கஞ்சியில் இதன் இலை சேர்க்கப்படுவதுண்டு.
கொவ்வை | |
---|---|
![]() | |
கோவை | |
![]() | |
கோவைக்காய் குறுக்கு வெட்டுத் தோற்றம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள் |
வரிசை: | Cucurbitales |
குடும்பம்: | Cucurbitaceae |
பேரினம்: | Coccinia |
இனம்: | C. grandis |
இருசொற் பெயரீடு | |
Coccinia grandis (L.) Voigt | |
மருத்துவ பயன்பாடுகள்
கண்குளிர்ச்சியை உண்டாக்கும். இலைச்சாற்றுடன் வெண்ணெய் சேர்த்து சிரங்குகளுக்குப் பூசலாம். இதன் இலைச்சாற்றைப் பருகி வந்தால் நீரழிவு நோய் கட்டுப்படும். கொவ்வங்காய் கோரோசனை மாத்திரை செய்யப் பயன்படுகிறது.
இலக்கியத்தில் கோவை
இதன் பழங்கள் ஒரு கவனிக்கத்தக்க செந்நிறத்தில் இருக்கும். இதன் காரணமாக திருநாவுக்கரசர் பின்வரும் தனது பாடலில் சிவனின் வாய்நிறத்திற்கு உவமையாக இதைப் பயன்படுத்துகிறார்.[1]
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்ல் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.
உசாத்துணை
- மூலிகைகள் - ஓர் அறிமுகம் - சித்தமருத்துவ கலாநிதி சே. சிவசண்முகராஜா
மேற்கோள்கள்
- சி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி. "தமிழ் இலக்கியம் - தொன்று தொட்டு இன்று வரை". பார்த்த நாள் 2006-09-18.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.