காசினிக்கீரை

இக்கீரைக்கு குளிர்ச்சியான தட்பவெப்பநிலை அவசியமாகும். மலைப்பிரதேசம்,குளிர்ச்சி பகுதிகளான கொடைக்கானல், ஏற்காடு, சேர்வராயன் மலைப்பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.மேலும் நல்ல குளிர்ச்சியான தோப்புப் பகுதிகளிலும் இக்கீரையை பயிரிடலாம். காசினிக்கீரையின் தாவரவியல் பெயர் 'சிக்கோரியம் இன்டிபஸ்' [Chicorium intybus] என்பதாகும். காபி பொடியில் கலக்கப்படும் சிக்கரி இச்செடியில் இருந்து தான் எடுக்கப்படுகிறது.

காசினிக்கீரை

மருத்துவப் பயன்கள்:

  • காசினிக் கீரையுடன் சீரகம், மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.
  • காசினிக் கீரையைத் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக் கற்கள் கரையும்.
  • காசினிக் கீரை, சிறுகுறிஞ்சான் இலை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அவற்றை உலர்த்தி பொடியாக்கிச் சாப்பிட்டு வந்தால் கணையக் கோளாறுகள் அனைத்தும் தீரும்.
  • காசினிக் கீரையுடன் சிறிது பார்லி, மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் உடலில் நீர் கோர்த்துக் கொண்டதால் ஏற்படும்  வீக்கம் கரையும்.
  • காசினிக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி தினமும் இரவில் சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
  • சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.