மணித்தக்காளி

மணித்தக்காளி அல்லது மணத்தக்காளி என்பது சொலனேஸி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்.[1]

மணித்தக்காளி
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Solanales
குடும்பம்: Solanaceae
பேரினம்: Solanum
இனம்: S. nigrum
இருசொற் பெயரீடு
Solanum nigrum
L.
துணையினம்

S. nigrum subsp. nigrum
S. nigrum subsp. schultesii

மற்ற பெயர்கள்

இது மணித்தக்காளி, கறுப்பு மணித்தக்காளி, மிளகு தக்காளி மற்றும் மணல்தக்காளி என்ற பெயர்களைக் கொண்டும் குறிப்பிடப்படுகிறது.[2]

சுக்குட்டி கீரை

மணித்தக்காளி தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சுக்குட்டி கீரை எனவும் கூறப்படுகிறது.

இதன் தாவரவியல் பெயர் சொலனம் நைக்ரம். இது ஓராண்டுத் தாவரம் ஆகும்.

மருத்துவப் பண்புகள்

இதிலுள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவப் பண்புகள் காரணமாக இது உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் ஆகியன.

மருத்துவப் பயன்

இதை உட்கொள்வதன்மூலம் இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், கணையம், வயிறு மற்றும் குடல் தொடர்பான பல நோய்களுக்கு உகந்தது என்பது மரபாக அறியப்படுவது. வாய் புண் மற்றும் வயிற்று புண் குணமடைய இது ஒரு சிறப்பான மருந்தாகும், கீரையாக சமைத்தும் அல்லது அரைத்து சாறு எடுத்து பருகலாம். 

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

மூலிகையே மருந்து 04: ‘மண’ (மகிழ்ச்சிக்கு) தக்காளி!

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.