மத்திய விசயாசு

மத்திய விசயாசு (பிலிப்பினோ: Gitnang Kabisayaan) என்பது பிலிப்பீன்சின் பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் VII எனக் குறிக்கப்படுகின்றது. இது நான்கு மாகாணங்களைக் கொண்டுள்ளது. இதன் தலைநகரம் செபு நகரம் ஆகும். இது விசயாசு தீவுக்கூட்டத்தின் மத்திய பகுதியாகும். 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 6,800,180 மக்கள் இங்கு வசிக்கின்றனர். இது நாட்டின் 17 பிராந்தியங்களுள் ஐந்தாவது அதிக சனத்தொகை கூடிய பிராந்தியமாகும். இப்பிராந்தியத்தின் பரப்பளவு 15,875 கிமீ² ஆகும்.

பிராந்தியம் VII
மத்திய விசயாசு
பிராந்தியம்

பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் VII இன் அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
தீவுக் கூட்டம்விசயன் தீவுகள்
பிராந்திய மத்திய நிலையம்செபு நகரம்
பரப்பளவு
  மொத்தம்15,875
மக்கள்தொகை (2010)[1]
  மொத்தம்68,00,180
  அடர்த்தி430
நேர வலயம்பிநேவ (ஒசநே+8)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுPH-07
மாகாணங்கள்4
நகரங்கள்16
நகராட்சிகள்116
பரங்கேகள்3,003
மாவட்டங்கள்15

மேற்கோள்கள்

  1. "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities". 2010 Census and Housing Population. National Statistics Office. பார்த்த நாள் 9 August 2013.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.