லூசோன்
லூசோன் (Luzon) பிலிப்பீன்சிலுள்ள மிகப்பெரியதும் மக்கள்தொகை மிக்கதுமான தீவு. தீவுக் கூட்டத்தின் வடகோடியில் அமைந்துள்ள இத்தீவு, நாட்டின் பொருளியல், அரசியல் மையமாக விளங்குகின்றது. நாட்டின் தலைநகரம் மணிலா இத்தீவில் உள்ளது. 2010 கணக்கெடுப்பின்படி 48 மில்லியன் மக்கள்தொகை உள்ள இத்தீவு[1] நான்காவது மிகுந்த மக்கள்தொகை உடையத் தீவாக விளங்குகின்றது; இதற்கு முன்னதாக சாவகம், ஒன்சூ மற்றும் பெரிய பிரித்தானியா உள்ளன.
![]() லூசோன் நிலப்பகுதி சிவப்பில்; தொடர்புள்ள தீவுகள் கருஞ்சிவப்பில் | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | தென்கிழக்காசியா |
தீவுக்கூட்டம் | பிலிப்பீன்சு |
முக்கிய தீவுகள் | லூசோன், மின்டோரோ |
பரப்பளவு | 109,965 km2 (42,458 sq mi) |
பரப்பளவின்படி, தரவரிசை | 15வது |
உயர்ந்த ஏற்றம் | 2 |
உயர்ந்த புள்ளி | புலக் சிகரம் |
நிர்வாகம் | |
பிலிப்பீன்சு | |
மண்டலங்கள் | தேசியத் தலைநகர் வலயம், பைகோல், ககாயன் பள்ளத்தாக்கு, காலாபார்சோன், மத்திய லூசோன், கோர்டில்லேரா, இலோக்கோசு |
பெரிய குடியிருப்பு | குவிசோன் நகரம் (மக். 2,761,720[1]) |
மக்கள் | |
மக்கள்தொகை | 48,520,774[1][2] (2010) |
அடர்த்தி | 441 |
இனக்குழுக்கள் | Aeta, Bicolano, Ibanag, Igorot, Ilokano, Kapampangan, Pangasinan, Tagalog |
லூசோன் பிலிப்பீன்சின் மூன்று முதன்மை தீவுக்கூட்டங்களில் ஒன்றாகவும் குறிப்பிடப்படுகின்றது. அப்போது, லூசோன் தீவுடன் வடக்கில் பாடனெசு, பாபுயன் தீவுகளும் கிழக்கில் போலிலோ தீவுகளும் தெற்கில் பரவியுள்ள கடன்டுவான்சு, மரின்டுக், மாசுபேட், ரொம்ப்ளான், மின்டோரோ மற்றும் பலவான் தீவுகளும் அடங்கி உள்ளன.[3]
மேற்சான்றுகள்
- "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities". 2010 Census and Housing Population. National Statistics Office. பார்த்த நாள் 13 February 2013.
- Figure composed of the 8 administrative regions excluding the island provinces of Batanes, Catanduanes, and Masbate and the region MIMAROPA
- Zaide, Sonia M.. The Philippines, a Unique Nation. பக். 50.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.