சாவகம் (தீவு)

சாவகம் (Java) என்பது இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும். அத்துடன் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவும் இங்குள்ளது. இந்து மன்னர்களினதும், பின்னர் டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆதிக்கத்திலும் இருந்த சாவகம் இப்போது இந்தோனீசியாவின் பொருளாதாரம், மற்றும் அரசியலில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. 2006 இல் 130 மில்லியன் மக்கள் தொகையை இது கொண்டிருந்தது[1]. இதுவே உலகின் மிகவும் மக்கள் அடர்த்தி கூடிய தீவாகும்.

ஜாவா
Java
உள்ளூர் பெயர்: Jawa
Topography of Java
புவியியல்
அமைவிடம்தென்கிழக்காசியா
ஆள்கூறுகள்7°30′10″S 111°15′47″E
தீவுக்கூட்டம்சுந்தா தீவுகள்
உயர்ந்த புள்ளிசுமேரு
நிர்வாகம்
இந்தோனீசியா
மாகாணங்கள்பாண்டென்,
ஜகார்த்தா சிறப்பு தலைநகர் மாவட்டம்,
மேற்கு ஜாவா,
மத்திய ஜாவா,
கிழக்கு ஜாவா,
யோக்யாகார்த்தா
பெரிய குடியிருப்புஜகார்த்தா
மக்கள்
மக்கள்தொகை124 மில்லியன் (2005)
இனக்குழுக்கள்சுந்தானீயர், ஜாவா மக்கள், Tenggerese, Badui, Osing, Bantenese, Cirebonese, Betawi

பொதுவாக எரிமலைகளின் குமுறல்களால் தோன்றிய இத்தீவு உலகின் பெரிய தீவுகளில் 13வது, இந்தோனீசியாவின் 5வது பெரிய தீவும் ஆகும்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.