தெலுங்கு நாயுடு

தெலுங்கு நாயுடு என்போர் தெலுங்கு பேசுகின்ற மக்களில் ஒரு பிரிவினர். தெலுங்கு பேசும் பலிஜா, கம்மவர், கவரா, ரெட்டி, கொல்லா , ராஜகம்பளம் ,போயர் மற்றும் முத்துராஜா ,வெலமா சமூகத்தினர் தமிழ் நாட்டில் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர்[1].

நாயக்கர் / நாயுடு
மொத்த மக்கள்தொகை
4.5 கோடி
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகம், இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், புதுச்சேரி, கேரளம்,
மொழி(கள்)
தெலுங்கு, தமிழ், கன்னடம், துளு
சமயங்கள்
இந்து

வரலாறு

ஆந்திராவில் இருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் விஜயநகரப் பேரரசு திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அவர்களால் குடியேறிய, தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் குழுவினர்.

1909 - இல், எட்கர் துர்ச்டன், சென்னை மாகாணத்திற்காக மக்கள் தொகை புள்ளி விவரங்களை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது என்னவெனில், "நாயுடு" அடைமொழி பயன்படுத்திய சாதிகள் எவையெவை எனப் பின்வருமாறு கூறியுள்ளார். அவை முறையே, பலிஜா, பேஸ்த, போயர், எக்காரி, கவரா, ஈடிகா நாயுடு , ரெட்டி, கொல்லா, கலிங்கி, காப்பு, முத்துராஜா, மற்றும் வேலம என்பனவாகும். மேலும் Thurston அவர்கள் "நாயுடு" எனும் சொல் தமிழில் நாயக்கர் அல்லது நாயக்கன் எனவும் அழைக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் இவர்கள் தமிழகத்தில் கொங்கு நாட்டு பகுதிகளான நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளிலும், தெற்கு பகுதியில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலும், மத்திய பகுதியில் செஞ்சி, தஞ்சைஆகிய பகுதிகளிலும், சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், வேலூர் ,கிருஷ்ணகிரி, ஆகிய இடங்களிலும் அதிகமாக வாழுகிறார்கள்.

சரித்திர காலத்தவர்கள்

திரைப்படத்துறை

  • தனுஷ் -தமிழ்த் திரைப்பட நடிகராவார்[2].
  • என்.டி. ராமராவ் - ஒரு பிர‌ப‌ல‌ தெலுங்கு திரைப்பட நடிகர்.
  • ஜூனியர் என்டிஆர் - ஒரு பிர‌ப‌ல‌ தெலுங்கு திரைப்பட நடிகர் .
  • அல்லு அர்ஜுன் - தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார் .
  • ராம் சரண் - தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார் .
  • சிரஞ்சீவி்- ஒரு பிர‌ப‌ல‌ தெலுங்கு திரைப்பட நடிகர் .
  • வெங்கடேஷ் டக்குபாதி - இந்தியத் தெலுங்குத் திரைப்பட நடிகர் ஆவார்.
  • ரங்காராவ் -ஒரு பிர‌ப‌ல‌ தெலுங்கு திரைப்பட நடிகர் .
  • கிருஷ்ணா -தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் ஆவார் .
  • அக்கினேனி நாகார்ஜுனா - இந்தியத் திரைப்படநடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.
  • அக்கினேனி நாகேஸ்வர ராவ் - தென்னிந்திய திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமாவார்.
  • ரவி தேஜா - தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார்.
  • விஜயகாந்த் திரைப்பட நடிகர்
  • எம்.ஆர். ராதா திரைப்பட நடிகர்
  • ஜெயம் ரவி தமிழ்த் திரைப்பட நடிகர்
  • பாக்யராஜ் - தமிழ்த் திரைப்பட நடிகர்
  • விஷால் - தமிழ்த் திரைப்பட நடிகராவார்.
  • ஜீவா - தமிழ்த் திரைப்பட நடிகராவார்.
  • நானி - தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கும் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார்.
  • விமல் -தமிழ்த் திரைப்பட நடிகராவார்.
  • ஆதி - தமிழ்த் திரைப்பட நடிகராவார்.
  • ரவி கிருஷ்ணன் - தமிழ்த் திரைப்பட நடிகராவார்.

சமூகப்பிரமுகர்கள்

மேற்கோள்கள்

  1. Thurston, Edgar; Rangachari, K. (1909). Castes and Tribes of Southern India. V (M to P). Madras: Government Press. பக். 138. http://www.archive.org/details/castestribesofso05thuriala. பார்த்த நாள்: 2012-03-24.
  2. https://tamil.oneindia.com/news/2004/11/18/dhanush.html
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.