ஆற்காடு வீராசாமி
ஆற்காடு நா. வீராசாமி, (ஆங்கிலம் Arcot N. Veeraswami) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கக் காலம் முதல் முக்கிய பங்கு வகிக்கின்றார். திமுக முன்னாள் பொருளாளர் 1994 முதல் 2008 வரை பணியாற்றியுள்ளார் [1] .தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி துணை தலைவர் 2001 முதல் 2006 வரை பணியாற்றியுள்ளார் . மூன்று முறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகேயுள்ள குப்புடிச்சாத்தம் கிராமத்தில் 21 ஏப்ரல் 1937ஆம் ஆண்டு பிறந்தார். 1967, 1971இல் ஆற்காடு சட்டமன்றத் தொகுதியில் இருந்தும், 1989ல் புரசைவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் இருந்தும், 1996, 2001 Legislative Council 2006ல் அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். 1977 Legislative Council 1988 வரை மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராகவும் 10 ஆண்டுகள் மேலவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார்[2] .2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்ற தேர்தலில் உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் இவர் போட்டியிடவில்லை.[3][4]
ஆற்காடு நா. வீராசாமி | |
---|---|
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஏப்ரல் 21, 1937 குப்புடிச்சாத்தம், ஆற்காடு வட்டம், வேலூர் மாவட்டம் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |