சுந்தர் சி.

சுந்தர் சி (ஆங்கிலம்:Sundar C, பிறப்பு: 21 சனவரி 1968) தமிழ்த் திரைப்பட இயக்குனரும் நடிகருமாவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர், தமிழில் 24 திரைப்படங்களை இயக்கியுள்ளார். தலைநகரம் படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார்.[1] ஆரம்ப காலத்தில், மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்த இவர் முறை மாமன் என்ற நகைச்சுவைத் திரைப்படம் வாயிலாக இயக்குனராக அறிமுகமானார். இவருடைய பல படங்களில் கதாநாயகியின் பெயர் இந்து என்பதாகும். உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம் ஆகிய திரைப்படங்கள் இவருடைய இயக்கத்தில் குறிப்பிடத்தக்கவையாக அமைந்தன. மேட்டுக்குடி, வின்னர், நாம் இருவர் நமக்கு இருவர், லண்டன், கலகலப்பு போன்றவை இவர் இயக்கத்தில் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படங்கள் ஆகும்.

சுந்தர் சி.
பிறப்புசுந்தரவேல் சிதம்பரம் பிள்ளை
21 சனவரி 1968 (1968-01-21)
ஈரோடு, தமிழ்நாடு
பணிநடிகர்,
திரைப்பட இயக்குநர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1995 – தற்போது வரை
பெற்றோர்சிதம்பரம் பிள்ளை
தெய்வானை அம்மாள்
வாழ்க்கைத்
துணை
குஷ்பு

திரைப்படத்துறை

இயக்குநர்

1995-ம் ஆண்டு முறை மாமன் திரைப்படம் மூலமாக சுந்தர் சி. அறிமுகமானார், அதன்பிறகு முறை மாப்பிள்ளை, என்ற அருண் விஜய்யுடைய முதல் படத்தை இயக்கினார். ரஜினிகாந்த்டைய அருணாச்சலம், கமல்ஹாசனுடைய அன்பே சிவம் மட்டுமின்றி நடிகர்கள் கார்த்திக், பிரசாந்த், அர்ஜூன், சரத்குமார், மற்றும் அஜித்குமார் ஆகியோருடைய திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

நடிகர்

2006-ம் ஆண்டு தன்னுடைய இயக்குநர் பணியை விடுத்து, தலை நகரம் திரைப்படம் மூலமாக நடிகரானார். ஆரம்பத்தில் சரியாக போகாவிட்டாலும், பின்னர் இத்திரைப்படம் மிகப் பெரும் வெற்றியடைந்தது. 2007-ம் ஆண்டு வெளிவந்த வீராப்பு திரைப்படமும் 2008-ம் ஆண்டு சக்தி சிதம்பரத்தின் நடிப்பில் வெளியான சண்டை திரைப்படமும் வெற்றி அடைந்தன. அயினும் அதனைத் தொடர்ந்து வெளியான திரைப்படங்களான ஆயுதம் செய்வோம், பெருமாள், தீ உள்ளிட்டவைகள் ஓரளவே ஓட ஐந்தாம் படை, குரு சிஷ்யன், வாடா, நகரம் உள்ளிட்டவை படுதோல்வியைத் தழுவின. தற்போது இவர் நடிக்கும் திரைப்படமான முரட்டுக் காளை ஏற்கனவே 1980-களில் வெளியான திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.[2]

சின்னத்திரை அறிமுகம்

2017-ம் ஆண்டில், தென்னிந்திய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் "நந்தினி" என்று தொடர் அவரின் மனைவி குஷ்பு அவர்களோடு இணைந்து தயாரித்தார்.[3]

திரைப்படங்கள்

நடிகராக

ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்
1995முறை மாமன்பஞ்சாயத்து காட்சியில் சிறப்புத் தோற்றம்
1997அருணாச்சலம்நிருபராக சிங்கமொன்று பாடலில்
2006தலை நகரம்ரைட்டு
2007வீராப்புபாண்டி வேதக்கண்ணு
2008சண்டைகதிரேசன்
2008ஆயுதம் செய்வோம்சைதை சத்யா
2009பெருமாள்பெருமாள்
2009தீசாரதி
2009ஐந்தாம் படைபிரபாகரன்
2010குரு சிஷ்யன்ஈட்டி
2010வாடாவெற்றிவேல்
2010நகரம் மறுபக்கம்செல்வம்
2011முரட்டு காளை

இயக்குநராக

ஆண்டுதிரைப்படம்நடிப்புகுறிப்புகள்
2014அரண்மனைவினய், சந்தானம், சுந்தர் சி, லட்சுமி ராய், ஆண்ட்ரியா, ஹன்சிகா மோட்வானி
2013கலகலப்பு - 2 சிவா, விமல், அஞ்சலி, ஓவியாஅறிவிப்பு வந்துள்ளது
2013மத கஜ ராஜாவிஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், மணிவண்ணன்
2012கலகலப்புசிவா, விமல், அஞ்சலி, ஓவியா, சந்தானம்
2010நகரம் மறுபக்கம்சுந்தர் சி., அனுயா
2006ரெண்டுமாதவன், ரீமா சென், அனுஷ்கா செட்டி
2005லண்டன்பிரசாந்த், வடிவேலு, மணிவண்ணன், அங்கிதா, மும்தாஜ்
2005சின்னாஅர்ஜூன், சினேகா, விக்ரமாதித்யா
2005தக திமி தாயுவ கிருஷ்ணா, விவேக், அங்கிதா, தேஜா சிறீ
2004கிரிஅர்ஜூன், வடிவேலு, ரீமா சென், திவ்யா ஸ்பான்டா
2003வின்னர்பிரசாந்த், வடிவேலு, கிரண்
2003அன்பே சிவம்கமல்ஹாசன், மாதவன், கிரண்
2002அழகான நாட்கள்கார்த்திக், ரம்பா, மும்தாஜ்
2001ரிஷிசரத் குமார், மீனா, சங்கவி
2001உள்ளம் கொள்ளை போகுதேபிரபு தேவா, விவேக், அஞ்சலா சாவேரி, கார்த்திக்
2000கண்ணன் வருவான்கார்த்திக், திவ்யா உன்னி
2000உன்னைக் கண் தேடுதேசத்யராஜ், குஷ்பூ, லிவிங்க்ஸ்டன்
2000அழகர்சாமிசத்யராஜ், ரோஜா
1999உனக்காக எல்லாம் உனக்காககார்த்திக், கவுண்டமணி, விவேக், ரம்பா
1999உன்னைத் தேடிஅஜித் குமார், மாளவிகா, சுவாதி
1999சுயம்வரம்சத்யராஜ், செந்தில், கார்த்திக், ரம்பா, பிரபு தேவா
1998நாம் இருவர் நமக்கு இருவர்பிரபு தேவா, மணிவன்னன், செந்தில் மீனா, மகேஷ்வரி
1997அருணாச்சலம்ரஜினிகாந்த், செந்தில், சௌந்தர்யா, ரம்பா
1997ஜானகிராமன்சரத் குமார், நக்மா, கவுண்டமணி & செந்தில், மணிவன்னன், ரம்பா
1996மேட்டுக்குடிகார்த்திக், கவுண்டமணி, செந்தில், நக்மா
1996உள்ளத்தை அள்ளித்தாகார்த்திக், கவுண்டமணி, செந்தில், ரம்பா
1995முறை மாமன்ஜெயராம், கவுண்டமணி, செந்தில், குஷ்பூ
1995முறை மாப்பிள்ளைஅருண் விஜய், கிருத்திகா

பாடகராக

ஆண்டுதிரைப்படம்பாடல்இசையமைப்பாளர்குறிப்புகள்
2010குரு சிஷ்யன்"சுப்பையா சுப்பையா"தீனாசத்யராஜ் உடன் இணைந்து பாடிய பாடல்
2008சண்டை"வாடி என் கப்பக்கிழங்கு"தீனா

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. "Sundar C. is on a roll". தி இந்து (2 October 2007). பார்த்த நாள் 8 May 2010.
  2. Retrieved on 2009-02-05. Bollywoodgate.com. Retrieved on 2012-04-19.
  3. http://www.vinodadarshan.com/2017/01/nandini-tamil-serial-cast-actress-actor.html?m=1

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.