சின்னா (திரைப்படம்)
சின்னா (Chinna) 2005 இல் இந்தியாவில் வெளியான அதிரடித் தமிழ் திரைப்படமாகும். இதனை இயக்குனர் சுந்தர் சி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் அர்ஜுன் மற்றும் ஸ்நேகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இது பின்னர் தெலுங்கில் "கொடி" என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டதுடன், ஒடிசா மொழியில் "க்ரிமினல்" என்ற பெயரில் ரீமெக் செய்யப்பட்டது.[1]
சின்னா | |
---|---|
இயக்கம் | சுந்தர். சி |
தயாரிப்பு | ஸ்ரீநிவாசா ராஜா |
கதை | சுந்தர். சி |
திரைக்கதை | சுந்தர். சி |
இசை | டி.இமான் |
நடிப்பு | ஐஜூன், சிநேகா, விஜயகுமார், விக்ரமாதித்யா |
ஒளிப்பதிவு | பிரசாத் முரேல்லா |
படத்தொகுப்பு | காசி விஸ்வநாதன் |
கலையகம் | ஸ்ரீஸ்ரீ சித்ரா |
வெளியீடு | 15 சூலை 2005 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | தமிழ் |
மொழி | தமிழ் |
கதை
காயத்ரி (ஸ்நேகா) ஒரு நீர்ப்பாசனப் பொறியியலாளரை (விக்ரமாதித்யா), அவரது விருப்பமின்றி திருமணம் செய்வதுடன் படம் துவங்குகிறது. அவர் பவளப் பாறைகள் மற்றும் ஏனைய கடல் சூழல் அமைப்புக்கள் சம்பந்தமாக படிப்பதற்கு இராமேஸ்வரம் செல்கிறார். அங்கு அவருடைய மாமனார் வினுசக்ரவர்த்தி மீனவ தொழில் செய்து வருகிறார்.
அங்கு காயத்ரி சின்னா (அர்ஜுன்) மற்றும் அவரது உதவியாளர்களான மன்சூர் அலி கான் உள்ளிட்டவர்களை சந்திக்கின்றனர். இவர்கள் உள்ளூரில் வன்செயல் புரியும் குழு ஒன்றுக்கு வேலை செய்பவர்களாவர். காயத்ரி சின்னாவை உள்ளூர் எஸ்.பி.(விஜயகுமார்) இடம் சிக்க வைக்க எத்தனிக்க, அவரது மாமா தடுத்து விடுகிறார்.
கடல் பற்றி அறிய காயத்ரியின் மாமா அவரை சின்னாவிடம் அனுப்பி வைக்கிறார். சில நாட்களில் இருவரும் காதல் வயப்படுகின்றனர். ஆனால் காயத்ரியின் பெற்றோர் அவரை ஒரு கடல் பொறியியலாளருக்கு திருமணம் செய்து வைக்கிறார்.
படத்தின் இரண்டாம் பகுதியில் சின்னா, காயத்ரியை அடைந்து கொள்வதற்காக பலரை கொலை செய்கிறார். இறுதியில் காயத்ரியிடுன் இணைந்தாரா என்பது மீதிக்கதை. .[2]
கதாபாத்திரங்கள்
- அர்ஜுன் - சின்னா
- ஸ்நேகா - காயத்ரி
- விஜயகுமார் - காயத்ரியின் மாமனார் மற்றும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி
- விக்ரமதித்யா - காயத்ரியின் கணவர்
- லிவிங்ஸ்டன் - பொலீஸ் அதிகாரி
- மன்சூர் அலி கான் - சின்னாவின் நண்பர்
- பொன்னம்பலம் - சின்னாவின் நண்பர்
- வினுச்சக்கரவர்த்தி - காயத்ரியின் மாமனார்
- ஜெயப்பிரகாஷ் ரெட்டி - சின்னாவின் முன்னாள் முதலாளி
- மணிவண்ணன்
- எம்.எஸ்.பாஸ்கர்
- ரியாஸ் கான்
- பேஸன்ட் ரவி [3]