சுயம்வரம்

பழங்காலத்தில் தன் மகளுக்கு தக்க மணமகனை தேடும் முயற்சியில் மன்னன் எல்லா நாட்டு அரசரையும் ஓர் சபையில் கூட்டி, தன் மகள் விரும்புபவனுக்கு மணமுடித்துக் கொடுத்தலே சுயம்வரம் ஆகும். இதனை தன் வரிப்பு எனவும் அழைப்பர். அதாவது தனக்கான கணவனை ஒரு பெண் தானே வரித்துக் கொள்ளல் எனப் பொருள்படும்.

சுயம்வர முறை

இந்த சுயம்வர முறை இளவரசிகள் தங்களுக்கு விருப்பமானவர்களைத் தேர்வு செய்து கொள்ள மட்டும் பயன்படுத்திய ஒரு முறையாக பல பழங்கதைகள் உள்ளன. இக்கதைகளிலுள்ளபடி சுயம்வரம் என்பது, இளவரசியின் தோழியானவள் ஒவ்வோர் அரசராக, அவர்களின் வீரச்செயல்கள், பண்பு, குலப்பெருமை, மாண்பு முதலிய குணங்களை ஒவ்வொன்றாக எடுத்துரைப்பாள். இவற்றில் மணமகளினை கவரும் ஒருவனுக்கு அவள் மாலையிட்டு மணமகனைத் தேர்வு செய்வார்.

பழங்கதைகளில் சுயம்வரம்

சீதை, தமயந்தி மற்றும் திரௌபதி ஆகியவரகளின் சுயம்வரங்கள் மகாபாரத, இராமாயணக் காவியங்களில் இடம் பெற்றுள்ளது. இவற்றின்படி, தமயந்தி, தனக்காக காத்திருந்த தேவர்களையெல்லாம் விட்டுவிட்டு, தன் அறிவுக்கூர்மையால் நளனை இனங்கண்டும்; தன் வில்வித்தையால் திரௌபதியை அருச்சுனன் சுயம்வரப் போட்டியில் மணந்தார்கள்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.