அழகர்சாமி (திரைப்படம்)

அழகர்சாமி 2000ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் சத்தியராஜ் நடித்து வெளியான திரைப்படமாகும். இதில் ராதாரவி, வினு சக்ரவர்த்தி, பொன்னம்பலம், ரோஜா, சுஜாதா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

அழகர்சாமி
இயக்கம்சுந்தர் சி
தயாரிப்புமலர் பாலு
கதைசெல்வராஜ்
இசைதேவா
ஒளிப்பதிவுசெந்தில்குமார்
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்

கதைச் சுருக்கம்

சுஜாதா இராதாரவியிடம் வாங்கிய கடனுக்காக அடமானமாக அவர் வீட்டு வாசலில் (அவருக்கு தெரியாமல்) பச்சிளம் குழந்தையாக இருக்கும் சத்தியராஜை விட்டுச்செல்கிறார். சத்தியராஜ் அவர் வீட்டுக்கு வந்ததும் அவருக்கு பல நன்மையான செய்திகள் கிடைத்ததால் அவரை இராதாரவி பிரியத்துடன் வளர்க்கிறார். சத்தியராஜ் அவர் மகனாக இல்லாவிட்டாலும் மகனை விட மேலாக நடத்துகிறார். இராதாரவியின் அக்காள் கணவனான வினு சக்ரவர்த்திக்கும் அவர் மகனான பொன்னம்பலத்துக்கும் சத்தியராஜைக் கண்டால் பிடிக்காது. இராதாரவியின் மனைவி ஒரு ஆண்டு மட்டுமே அவருடன் வாழ்ந்துவிட்டுச் சிற்றூர் வாழ்க்கை பிடிக்காததால் நகரத்திலேயே வசிப்பவர். இராதாரவியின் மனைவி நகரத்தில் கவலைக்கிடமாக இருப்பதாக தந்தி வருகிறது. தன் மனைவியை பார்க்க இராதாரவி நகரத்துக்குச் செல்கிறார். அவர் மனைவி தங்கள் மகள் ரோஜாவும் தன்னைப்போலவே வளர்ந்து விட்டதாகவும் அவருக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து தரவேண்டும் என்ற உறுதி வாங்கி கொண்டு இறந்துவிடுகிறார்.

ரோஜா தனக்குப் பார்க்கும் வரன்களை அவர்களிடம் பொய் சொல்லி கலைத்துவிடுகிறார். மாமனான வினு சக்ரவர்த்தி தன் மகனுக்கு ரோஜாவை கட்டிவைத்து இராதாரவியின் சொத்துக்கள் அனைத்தையும் அடையத் திட்டமிடுகிறார். பெண் கேட்டு செல்லும் வினு சக்ரவர்த்தியைத் திட்டி அனுப்பி ரோஜாவை சத்தியராஜுக்கே கட்டி வைப்பதாக ஊர் முன்னிலையில் கூறுகிறார். ரோஜா இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார் அவருக்கு சொத்து வேண்டும் என்றால் சத்தியராஜைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என இராதாரவி கூறுவதால் சத்தியராஜைத் திருமணம் செய்து கொள்கிறார். ரோஜா கர்ப்பமாகிவிடுகிறார். தான் திருமணமுறிவு ஒப்பந்தம் செய்ய ஒப்புக்கொள்வதாகவும் தனக்கு மகனைப் பெற்று கொடுத்துவிட்டால் ரோஜாவின் சொல்படி திருமணமுறிவு நடக்கும் என்று சத்தியராஜ் கூறுகிறார். சுஜாதாவை கண்டதும் அவரை சத்தியராஜிடம் சேர்த்து வைக்க இராதாரவி முயல்கிறார் அதைத் தடுத்து இந்த இரகசியத்தை யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் தான் வேலைக்காரியாக அங்கு வருவதாகவும் சுஜாதா சொல்கிறார். தன்மகனையும் மருமகளையும் சேர்த்துவைக்க சுஜாதா கவுண்டமணியுடம் இணைந்து முயற்சிக்கிறார். ரோஜாவைக் கொன்று விட வினு சக்கரவர்த்தி திட்டமிட்டு அவருக்கு ஆளைக் கொல்லும் நஞ்சு உள்ள மருந்தைத் தருகிறார். சுஜாதாவினால் அதிலிருந்து ரோஜா தப்பித்துத் திருந்தி சத்தியராஜுடன் இணைகிறார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.