ஸ்ரீரங்கப்பட்டணம்

ஸ்ரீரங்கப்பட்டணம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள நகராகும். மைசூர் நகருக்கு அருகில் அமைந்த இந்நகரம் சமய, பண்பாட்டு, வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும்.[1]

ஸ்ரீரங்கப்பட்டணம்
  நகரம்  
ஸ்ரீரங்கப்பட்டணம்
இருப்பிடம்: ஸ்ரீரங்கப்பட்டணம்
, கர்நாடகம்
அமைவிடம் 12°24′50″N 76°42′14″E
நாடு  இந்தியா
மாநிலம் கர்நாடகம்
மாவட்டம் மாண்டியா
[[கர்நாடகம் ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[கர்நாடகம் முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி ஸ்ரீரங்கப்பட்டணம்
மக்கள் தொகை

அடர்த்தி

23 (2001)

1,803.69/km2 (4,672/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

13 கிமீ2 (5 சதுர மைல்)

679 மீட்டர்கள் (2,228 ft)

அமைவிடம்

மைசூரிலிருந்து 13 கிமீ தொலைவில் இந்நகரம் உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டிலிருந்து வெளிவரும் காவிரி 8 கிமீ பயணித்து உண்டாக்கிய தீவில் இந்நகரம் உள்ளதால் இதை தீவு நகரம் எனலாம். காவிரியில் அமைந்த தீவுகளிலேயே இது தான் பெரிய தீவு ஆகும். மைசூரை பெங்களூருடன் இணைக்கும் தொடர் வண்டிப்பாதையும் சாலையும் இதன் ஊடாக செல்லுகின்றன.

சமய தொடர்பு

இங்கு அமைந்த அரங்கநாதசாமி கோயிலின் காரணமாகவே இந்நகருக்கு ஸ்ரீரங்கப்பட்டணம் என்ற பெயர் ஏற்பட்டது. அரங்கநாதசாமி இங்குள்ளதால் இந்நகரம் வைணவர்களின் புனித இடமாகவும் விளங்குகிறது. இங்குள்ள அரங்கநாதசாமி கோயில் கங்க மன்னர்களால் 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின் வந்த போசள மற்றும் விஜய நகர அரசுகளால் மேலும் புணரமைக்கப்பட்டு அவர்கள் பாணி கட்டட கலையும் இக்கோயிலில் கலந்துள்ளது.

இங்குள்ள அரங்கனை ஆதிரங்கன் எனவும் சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கனை மத்தியரங்கன் எனவும் திருவரங்கத்தில் உள்ள அரங்கனை அந்தியரங்கன் எனவும் அழைப்பர்.

வரலாறு

விஜய நகர பேரரசின் கீழ் ஸ்ரீரங்கப்பட்டணம் சிறப்பு இடத்தை பெற்றிருந்தது. இங்கிருந்து அவர்கள் மைசூர் மற்றும் தலக்காடு போன்ற அரசுகளை நிர்வகித்தனர். பிற்காலத்தில் விஜய நகர பேரரசின் பலம் குறைந்ததை கண்டு மைசூர் மன்னர் இராஜா உடையார் விஜய நகர பேரரசை எதிர்த்து அவர்களின் ஸ்ரீரங்கப்பட்டண தளபதி இரங்கராயரை தோற்கடித்து விஜய நகர பேரரசிலிருந்து சுதந்திரம் அடைந்து மைசூர் பேரரசுக்கு அடிகோலினார். விஜய நகர பேரரசின் தளபதியை தோற்கடித்த பிறகு 1610 ல் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் 10 நாட்களுக்கு தசரா திருவிழாவை கொண்டாடி தன் பலத்தையும் மைசூர் அரசின் சுயசார்பையும் பறைசாற்றினார்.

ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானின் காலத்தில் ஸ்ரீரங்கப்பட்டணம் அவர்களின் தலைநகராக விளங்கியது. திப்பு சூல்தானின் அரண்மனை மற்றும் ஜும்மா மசூதி ஆகியவை இந்திய இசுலாமிய கட்டடக் கலைக்கு சான்றாக உள்ளன.

திப்பு சுல்தான் அருங்காட்சியகம்

ஸ்ரீரங்கப்பட்டண சமர் 1799

இது நான்காம் ஆங்கிலேய - மைசூர் போரின் கடைசி சமராகவும் அமைந்தது. இச்சமரின் போது ஆங்கிலப் படையை ஜெனரல் ஹாரிஸ் வழிநடத்தினார். திப்புவின் பிரதம மந்திரி சித்திக்கின் துரோகம் காரணமாக ஆங்கிலப்படைகள் குறைந்த எதிர்ப்புடன் எல்லைச்சுவரை கைப்பற்றினர். அடுத்ததாக குண்டு துகள்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் நீர் புக வைத்ததால் அவை பயனற்று போயின. திப்புவின் மரணத்தோடு இப்போர் முடிவுக்கு வந்தது.

பஞ்சரங்க தலங்கள்

கோவில்அமைவிடம்
ஸ்ரீரங்கப்பட்டணம் ரங்கநாதர் கோயில்ஸ்ரீரங்கப்பட்டணம்
திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்திருவரங்கம்
சாரங்கபாணி திருக்கோவில்கும்பகோணம்
கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில்திருப்பேர்நகர் என்ற கோவிலடி
பரிமள ரங்கநாதபெருமாள் திருக்கோவில்மயிலாடுதுறை
ஸ்ரீரங்கப்பட்டணத்திலுள்ள திப்பு சுல்தானின் கோடை கால அரண்மனை

மேற்கோள்கள்

  1. Shrirangapattana

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.