சிறீரங்கப்பட்டணம் அரங்கநாதசுவாமி கோயில்

ரங்கநாதர் கோயில் (Ranganthaswamy temple) கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டம், காவேரி ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணம் எனும் தீவில் அமைந்த இக்கோயில் பெருமாளுக்கு அர்பணிக்கப்பட்டது. இக்கோயிலின் மூலவர் ரங்கநாதர், தாயார் ரங்கநாயகி. இக்கோயிலின் தீர்த்தமாக காவிரியும், கடைபிடிக்கப்படும் ஆகமமாக பாஞ்சராத்ரமும் அமைந்துள்ளது.

ஸ்ரீரங்கப்பட்டினம் ரங்கநாதர் கோயில்
வைணவக் கோயில்
ரங்கநாதர் கோயில் (கி. பி. 984 ) , ஸ்ரீரங்கப்பட்டினம், மாண்டியா மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகம்
மாவட்டம்மாண்டியா மாவட்டம்
மொழிகள்
  அலுவல் மொழிகன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
ரங்கநாதர் கோயில்

வரலாறு

மேலைக் கங்கர் குல அரச படைத்தலைவர் திருமலைய்யா என்பவரால், 984இல் இக்கோயில் கட்டப்பட்டது. 12ஆம் நூற்றாண்டில் ஹோய்சாள மன்னர் விஷ்ணுவர்தன் ஸ்ரீரங்கப்பட்டணம் தீவை இராமானுஜருக்கு தானமாக வழங்கினார்.

கோயில்

கோயில் கர்ப்பகிரகத்தில், மகாலட்சுமி, பூமாதேவியுடன், ஆதிசேசன் மீது பகவான் விஷ்ணு பள்ளி கொண்ட பெருமாளாக காட்சியளிக்கிறார். மேலும் நரசிம்மர், கிருஷ்ணர், வெங்கடேஸ்வரர், அனுமான்,கருடன், பிரம்மா மற்றும் ஆழ்வார்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது.

பஞ்சரங்க தலங்கள்

கோவில்அமைவிடம்
ரங்கநாதர் கோயில்ஸ்ரீரங்கப்பட்டணம்
திருஅரங்கநாதசுவாமி திருக்கோவில்திருவரங்கம்
சாரங்கபாணி திருக்கோவில்கும்பகோணம்
கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில்திருப்பேர் நகர் என்ற கோவிலடி (திருச்சி)
பரிமள ரங்கநாதபெருமாள் திருக்கோவில்மயிலாடுதுறை

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.