ஹளேபீடு

ஹளேபீடு (தமிழில் பழையவீடு) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். இது பண்டைக்காலத்தில் போசளர்களின் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்கியது. இது கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் துவார சமுத்திரம் எனவும் தோர சமுத்திரம் என்றழைக்கப்பட்டது. மாலிக் கபூர் என்பவனால் இருமுறை தாக்கப்பட்டதால் இந்நகரம் கைவிடப்பட்டது. அதனால் இந்நகரத்துக்கு ஹளேபீடு அல்லது பழையவீடு என பின்னர் பெயர் பெற்றது. இங்கு உள்ள போசாளேஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது.

ஹளேபீடுவில் உள்ள போசாளேஸ்வரர் கோயில்

இது ஒரு இரட்டைக்கோவிலாகும். இவை இரண்டும் சிவன் கோவில்கள் ஆகையால் இவற்றின் முன்புறம் ஒரே கல்லால் ஆன நந்திகள் உள்ளன. இவை ஏறத்தாழ 8 அடி உயரம் கொண்டவை. இக்கோவில்களின் பீடமானது நட்சத்திர வடிவில் உள்ளது. இக்கோவில்கள் இரண்டும் பண்டைக்காலத்தில் வேறு மன்னரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே இவையிரண்டும் முற்றுப்பெறாத நிலையில் உள்ளன.[1]

கோவிலுக்கு அருகில் அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம் ஒன்றும் அமைந்துள்ளது.

படக்காட்சியகம்

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. நிழற்படங்கள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.