கான் அப்துல் கப்பார் கான்
கான் அப்துல் கப்பார் கான் (Khan Abdul Ghaffar Khan, 1890 - 20 ஜனவரி 1988) (இந்தி: ख़ान अब्दुल ग़फ़्फ़ार ख़ान) பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை அகிம்சை முறையில் எதிர்த்தவர். மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர். இவர் எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்டவர்.
கான் கபார் கான் | |
---|---|
![]() 1940களில் கான் | |
வேறு பெயர்(கள்): | பத்ஷா கான், பச்சா கான், Sarhaddi Gandhi |
பிறந்த இடம்: | ஆஸ்த்நகர், உத்மான்சாயி, சார்சடா, பிரித்தானிய இந்தியா |
இறந்த இடம்: | பெஷாவர்
அடக்கம்: ஜலாலாபாத், ஆப்கானித்தான் |
இயக்கம்: | இந்திய விடுதலை இயக்கம் |
முக்கிய அமைப்புகள்: | இந்திய தேசியக் காங்கிரஸ், தேசிய அவாமி கட்சி |
சமயம்: | முஸ்லிம் |
இளம் வயதில் தனது குடும்பத்தால் பிரிட்டிஷ் போர்ப்படையில் சேர ஆதரிக்கப்பட்டார். இவர் ஒருமுறை ஆங்கிலேயர் ஒருவர் ஒரு இந்தியன் மீது காட்டிய கொடுமையைக் கண்டு சலிப்படைந்தார். இங்கிலாந்தில் இவர் படிக்க வேண்டும் என்று தம் குடும்பம் முடிவு செய்ததைத் தனது தாய் தடுத்ததால் போகவில்லை.
குதை கித்மத்கர் (அதாவது "இறைவனின் தொண்டர்கள்") என்ற புரட்சிப் படையை அமைத்த இவர் பலமுறை ஆங்கிலேயர் ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தியப் பிரிவினையைக் கடுமையாக எதிர்த்த இவர், காங்கிரஸ் கட்சி பிரிவினைத் திட்டத்தை ஆதரித்தவுடன், "எங்களை ஓநாய்களிடம் எறிந்துவிட்டீரே" என்று காங்கிரஸ் தலைவர்களிடம் சொன்னார்.
1946 ஆம் ஆண்டு நவகாளியில் நடை பெற்ற கலவரத்திற்குப் பின் காந்தியுடன் அமைதிப்பயணம் மேற்கொண்டார்.[1]
இந்தியப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் வாழ்ந்த இவர் பலமுறை பாகிஸ்தான் ஆட்சியால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய உளவாளி என்று தூற்றப்பட்டார்.
1985-இல் நோபல் அமைதி பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட இவர் 1987-இல் பாரத ரத்னா பெற்ற முதல் அயல்நாட்டவர் என்ற பெருமை பெற்றவர்.
1988-இல் இவர் இயற்கை எய்தினார்; இவரின் கடைசி ஆசைக்கேற்ப பிறந்த ஊரான ஜலாலாபாத் என்ற ஆப்கான் ஊரில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவரது இறுதி ஊர்வலத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பெசாவரில் இருந்து கைபர் கணவாய் வழியாக சலாலாபாத்துக்குச் சென்றனர். சோவியத் ஆப்கானியப் போர் கடுமையாக நடந்து கொண்டிருந்த போதும் இவரது இறுதிச் சடங்குகளை நிறைவேற்ற தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
- https://www.youtube.com/watch?v=mPavIGTWdlQ Mahatma Gandhi: Noa Khali March (1947) - extract | BFI National Archive